7460 ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்.

தீபச்செல்வன் (இயற்பெயர்: பாலேந்திரம் பிரதீபன்). சென்னை 600018: உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (சென்னை 600005: மணி ஆப்செட்).

136 பக்கம், விலை: இந்திய ரூபா 80., அளவு: 21×14 சமீ., ISBN: 978-93-80072-84-5.

யுத்தத்தின் வடுக்களைப் பிரதிபலிக்கும் கவிதைகள் இவை. ஒரு இனத்தின் இருண்டதொரு காலகட்டத்தை கவிதைகளினூடாக வரலாற்றுப்பதிவாக்கியிருக்கிறார்.  யுத்த அழிவின் நேரடிச் சாட்சிகளாக நின்று அந்தப் பேரவலத்தின் வாக்குமூலங்களாக அமைகின்றன இவரது கவிதைகள். 2008ம் ஆண்டு செப்டெம்பர் முதல் 2009 மே வரையில் அன்றாட யுத்தக் கொடுமைகளையும் மக்களின் அலைமோதல்களையும்உயிருக்கு அஞ்சி ஓடியதையும் அதற்குப் பின் வந்த நாட்களின் மனிதத் துயரங்களையும் ஏமாற்றங்களையும் ஒரு நாட்குறிப்புப் போலவே இக்கவிதைத்தொகுப்பில் பதிந்திருக்கின்றார். ஈழத்தின் வன்னியில் கிளிநொச்சி நகரத்தின் இரத்தினபுரம் கிராமத்தைச் சேர்ந்த இக்கவிஞர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் பட்டதாரி.

ஏனைய பதிவுகள்

13568 அரிச்சந்திரன் கதை.

மாஸ்டர் சிவலிங்கம். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 30 பக்கம்,