பஹீமா ஜஹான். நாகர்கோயில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, ஜுலை 2010. (சென்னை 60005: மணி ஓப்செட்).
136 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-89359-94-2.
ஈழத்தின் புதிய தலைமுறைக் கவிஞர்களில் முக்கியமானவரான பஹீமா ஜஹானின் தேர்ந்தெடுத்த கவிதைகளின் தொகுப்பு இந்நூல். இந்தக் கவிதைகள் பெண் என்ற உயிரியல் அம்சத்தில் ஊன்றி நின்று ஆணாதிக்கச் சமூகச் சூழலை எதிர்த்து மீறி மானுடப் பெருவெளியில் விரியும் வேட்கை கொண்டவை. ஒடுக்குமுறைக்கும் போர்க் கொடுமைகளுக்கும் இன அடக்குமுறைக்கும் மதக்கட்டுப்பாட்டுக்கும் எதிரானவை. சமத்துவமான அன்பையும் பாசத்தையும் காதலையும் வேண்டுபவை. இலங்கையில் குருநாகல் மாவட்டத்திலுள்ள மெல்சிரிபுரத்தைச் சேர்ந்தவர் பஹீமா ஜஹான். கணித ஆசிரியையான இவர் 90களின் நடுப்பகுதியிலிருந்து எழுத்துத் துறையில் ஈடுபட்டு வருகின்றார். ஒரு கடல் நீரூற்றி (2007), அபராதி (2009) ஆகிய கவிதைத் தொகுதிகளை ஏற்கெனவே வெளியிட்டவர்.