க.கோகுலதாஸ். வவுனியா: கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, கார்த்திகை 2004. (வவுனியா: நியூ ஆதவன் அச்சகம்).
35 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 125., அளவு: 21×14.5 சமீ.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவரான கோகுலதாஸின் முதலாவது கவிதைத் தொகுப்பு பாலைவனப் பனித்துளி என்ற பெயரில் வெளிவந்தது. இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுதியாகும். வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் தனது 15ஆவது பிரசுரமாக இதனை வெளியிட்டுள்ளது.