7463 இரவுகளில் பொழியும் துயரப்பனி.

தமிழ்நதி (இயற்பெயர்: கலைவாணி இராஜகுமாரன்). சென்னை 600 024: ஆழி-பனிக்குடம் கூட்டுப் பதிப்பு, ஆழி பப்ளிஷர்ஸ், 12 முதல் பிரதான சாலை, யுனைட்டட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (சென்னை: மணி ஆப்செட்).

104 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-80244-15-0.

ஈழத்துப் பின்புல வாழ்வியல் அழுத்தங்களைக் கவியாக்குவதில் தனக்கான தனித்தன்மைகளைப் பேணிவருபவர் தமிழ்நதி. தன்னைத்தானே தேடிக் கண்டுபிடித்து வாழ்வுக்கான அர்த்தம் கற்பித்து வாழத் துடிக்கும் ஜீவனின் சொல்லோவியங்களாகவே இவரது கவிதைகள் அமைகின்றன. பெண்சார் அனுபவங்களின் திமிறலும் நிமிறலும் காலத்தின் முன்னோக்கிய நகர்வுக்கான சமிக்ஞைகளாகவும் இவரது படைப்பனுபவம் விரிகின்றது. இந்நூல் இவரது அண்மைக்கால கவிதைகளின் தொகுப்பு. விடுதலைக்கான போரில் உயிர்நீத்த அனைத்துப் போராளிகளுக்கும் மக்களுக்கும் இத்தொகுதியை சமர்ப்பணம் செய்துள்ளார். இதன்மூலம் இவரது நோக்கும் போக்கும் கவியுணர்த்தும் தாக்கமும் எவ்வாறு மையங்கொள்ளும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். நூலின் முன்னட்டையில்- இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றம் தொடர்பான முக்கிய ஒளிப்பட ஆவணமொன்றின்  காட்சி  இடம்பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்