7465 இருள்-யாழி.

திருமாவளவன் (இயற்பெயர்: கனகசிங்கம் கருணாகரன்). நாகர்கோயில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2008. (சென்னை 60005: மணி ஓப்செட்).

80 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-89945-44-2.

யாழ்ப்பாணம் வறுத்தலைவிளான் கிராமத்தில் 1955இல் பிறந்த கருணாகரன் பின்னாளில் திருமாவளவன்  என்ற பெயரில் இலக்கிய உலகில் அறியப்பட்டவர். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பழைய மாணவரான இவர் சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் கட்டிட தொழில்நுட்ப மேற்பார்வையாளராகப் பணியாற்றியவர். இரண்டாவது ஈழப்போரின்போது புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் இவர் அங்கு ழகரம் என்ற சஞ்சிகையின் இணையாசிரியராக 1996-1997 காலப்பகுதியில் பணியாற்றியவர். பனிவயல் உழவு (2000), அஃதே இரவு அஃதே பகல் (2002) ஆகிய நூல்களைத் தொடர்ந்து வெளிவரும் திருமாவளவனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது. இதிலுள்ள கவிதைகளில் பேசப்படும் ஊரும் போரும், மனிதஅழிவுகளும் வெறும் நினைவுகளாக மங்கிக்கொண்டிருக்கும் புலம்பெயர் வாழ்வின் இன்றைய யதார்த்தத்தைத் துயரம் கவிந்த மனத்துடன் பதிவுசெய்கின்றன. கவிதையமைப்பிலும் மொழி நடையிலும் அழகியல் கூறுகளிலும் வாழ்க்கை குறித்தான பார்வைக் கோணத்திலும் திருமாவளவன் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டு வருவதை இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் தெளிவாக உணர்த்துகின்றன.

ஏனைய பதிவுகள்

17375 ஓட்டிச உலகில் நானும்…

தன் வரலாறு. மைதிலி றெஜினோல்ட். யாழ்ப்பாணம்: எங்கட புத்தகங்கள், 906/23, பருத்தித்துறை வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஜுலை 2023. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). 412 பக்கம்,

MrBet No deposit Added bonus 2024

Blogs Casino no deposit Free 5 Gambling Houses – Around €five hundred Put Added bonus How i price an educated on the-line casino poker web