7466 இளைஞர்கள் ஏற்கவேண்டிய சபதம்: கவிதைகள்.

நிலா தமிழின்தாசன். (இயற்பெயர்: மிக்கேல் அருள்மொழிராசா). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2009. (சென்னை 94: பி.வி.ஆர்.ஆப்செட்).

xii, 116 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 18×12.5 சமீ.

இக்கவிஞர் திருக்கோணமலையின் நிலாவெளியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மட்டக்களப்பு, களுதாவளையில் வாழ்ந்துவருபவர். 1976 முதல் கவிதைத் துறையில் ஈடுபட்டுவரும் இவர் ஏற்கெனவே நாளை (1993), புலர்வு (1994) ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். சமூகச் சிதறல்களின் தொகுப்பாக 51 தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கவிதை என்பது கவிஞனின் ஆத்மாவின் இராகம் என்பதை இக்கவிதைகளினூடு தெளிவாக வெளிப்படுத்துகின்றார்.  இந்நூலில் இயற்கை, அன்னை, காதல், கொடுமை, என விபரிக்கும் 51 கவிதைகள் இடம்பெற்று மணம்வீசுகின்றன. இளைஞர்களை நோக்கி அரிய பல கருத்துக்களை அள்ளிவீசும் இந்நூல் இவரது நான்காவது நூலாகும்.

ஏனைய பதிவுகள்

12651 – உயர் கணக்கீடு: உற்பத்திக் கணக்கீடு: அலகு 1-1.

கு.கலைச்செல்வன். கொழும்பு 6: கு.கலைச்செல்வன், எம்.ஓ.டீ. ஸ்டடி சென்டர், 33, பொஸ்வெல் பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 2000. (கொழும்பு : அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 46 பக்கம், விலை: ரூபா