7472 எதுவுமல்ல எதுவும்.

கருணாகரன். கிளிநொச்சி: மகிழ் வெளியீடு, 754 கனகராசா வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (யாழ்ப்பாணம்: கரிகணன்  பிறின்டேர்ஸ், காங்கேசன்துறை வீதி).

108 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×13.5 சமீ.

2006-2008 காலப்பகுதியில் எழுதப்பட்ட 56 கவிதைகளின் தொகுப்பு. இலங்கையின் வடக்கே இயக்கச்சியில் பிறந்தவர் கருணாகரன். இதுவரையில் ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல், ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள், பலியாடு ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகளை வெளியிட்டவர். இது இவரது நான்காவது கவிதைத் தொகுப்பாகும். மறுபடியும் மறுபடியும் எல்லாவற்றையும் சொல்லவும் திரும்பத்திரும்ப எல்லாவற்றையும் செய்யவும் வேண்டிய மனித விதி எல்லா அறிவியலையும் கேள்வியின் முன்னே நிறுத்துகின்றது. எதுவுமல்ல எதுவும் என்ற புரிதலை உணரும் கணம் இத்தருணமே. வேறுபாடுகள், முரண்பாடுகள் எல்லாமே அழகுதான் – பேதங்களும் ஏற்ற இறக்கங்களும் இல்லாதவரை. நினைவுகளின் சுமை எல்லாவற்றையும்விட அதிக பாரமானது. இந்தக் கவிதைகள் இப்படியே பலவற்றின் நிழலாயும் ஒளியாயும் இருக்கின்றன. சாட்சி, எதிர்ப்பு, விலகல் என்ற நிலைகளில் இயங்கிய ஒரு மனநிலையை இவை பிரதிபலிக்கின்றன.

ஏனைய பதிவுகள்