புசல்லாவை கணபதி. (இயற்பெயர் தே.கணபதி). கொழும்பு 6: மலையகம் வெளியீட்டகம், 57 மஹிந்த பிளேஸ், 1வது பதிப்பு, ஜுன் 2010. (கொட்டகலை: அம்பாள் அச்சகம், 273/5, பதிவாளர் காரியாலய வீதி).
viii, 72 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 196., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-9084-24-2.
கலைத்துவம் மிக்க தமது கவிதாவரிகளின் மூலம் சமூகத்தில் கடவுள் படைக்காத மனிதர்களைத் தேடுகின்றார் மலையக இளம் கவிஞர் புசல்லாவ கணபதி. இவரது கவிதைகள் சமூகத்தைக் கேள்விக்குறியாகத் தட்டிக் கேட்கின்றது. சமூக அவலங்களையும் பிரச்சினைகளையும் இனம்கண்டு வெளிப்படுத்தும் இவரது கவிதைகள் ஒரு சமூகமாற்றத்திற்கு அடித்தளமாக அமைகின்றன. அதனைத் தட்டிக் கேட்பதிலும், தன்னைச் சூழவுள்ள சமூகத்தின் பார்வையில் மாற்றத்தைத் தேடுவதிலும் துடிப்புமிக்க இளையதலைமுறையின் பிரதிநிதியாக இவர் தன் கவிதைகளினூடு தோற்றம் பெறுகின்றார். கொட்டகலையின் அரசினர் ஆசிரியர் கலாசாலையின் ஆசிரிய மாணவர் இவர்.