7481 கண்ணீர் வரைந்த கோடுகள்.

கஹட்டோவிட்ட நிஹாஸா நிஸார். குருநாகல்: வேகம் பதிப்பகம், கடுபொத்த வீதி, பஹமுன, 1வது பதிப்பு, 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை)

62 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 120., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-53225-0-8.

தொழில்ரீதியாக குடும்பத்தினருடன் கட்டாரில் வாழும் நிஹாஸா, கம்பஹா மாவட்டத்தில் உள்ள கஹட்டோவிட்ட என்ற கிராமத்தில் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை மாவனல்ல ஸாஹிராக் கல்லூரியிலும், கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்திலும், உயர் கல்வியை கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்திலும் கற்றுத் தேர்ந்தவர். தேசிய ரீதியில் தமிழ்த்தினப் போட்டிகளில் பரிசில்களை வென்றவர். இவரது முதலாவது நூலாக இக்கவிதைத் தொகுதி 24 கவிதைகளுடன் வெளிவருகின்றது. பெண்ணின் சுதந்திர வாழ்வுக்கான ஆசைகள், எதிர்பார்ப்புகளைச் சுட்டி நிற்கும் கவிதைகள் பெரும்பான்மையானவை. இயற்கை, தொழிலாளர் ஒற்றுமை, வெளிநாட்டு வேலைவாய்ப்பில் உள்ள சிக்கல்கள், அரசியல் உரிமைகள், தாயகச் சமாதானம், தாய்மை எனப் பல விடயங்களையும் எஞ்சியவை தொட்டுச் செல்கின்றன. 

ஏனைய பதிவுகள்

Fl Casinos on the internet

Blogs Casino Vegas Days mobile – Posido Gambling establishment Opinion Best Casinos on the internet Uk Wager Real money At the best Us Casinos on