பெரிய ஐங்கரன். கொழும்பு 6: மீரா பதிப்பகம், 291/6, 5/3A, எட்வேர்ட் அவென்யூ, 1வது பதிப்பு, ஏப்ரல் 2011. (கொழும்பு 6: R.S.T.Enterprises).
56 பக்கம், விலை: ரூபா 160., அளவு: 19.5×13 சமீ.
திருக்கோணமலை மாவட்டத்தின் உவர்மலையைச் சேர்ந்தவர் பெரிய ஐங்கரன். தனது தந்தையார் பொன்னையா பெரியதம்பியின் மறைவையொட்டி 31ம் நாள் நினைவாக இக்கவிதைநூலை வெளியிட்டுள்ளார். மழைக்காலத்தில் இக்கவிஞர் எழுதிய கவிதைகளின் தொகுப்பாக இவை இருப்பதால் எல்லா வரிகளிலும் மழையின் ஈரமும் வெள்ளத்தின் ஓட்டமும் குளிரின் கடுமையும் இருக்கின்றன. ஆனால் அதே வரிகளில் யாழ்ப்பாண நூலக எரிப்பின் சாம்பலும், ஈழப்போரின் காயங்களில் வழிந்த குருதியும், பதுங்குகுழியில் பதுங்கியிருக்கும் பாம்பின் நிழலும், 2004 ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட உடலங்களின் ஓலங்களும், உயிரோடு புதைக்கப்பட்ட மங்கையரின் இறுதிப் பெருமூச்சும், போரில் அள்ளுண்டு போன சிறார்களின் எதிர்காலம் பற்றிய கேள்வியும் நீக்கமற நிறைந்திருப்பதையும் காணமுடிகின்றது. மீரா பதிப்பகத்தினரின் 95ஆவது பிரசுரமாக இது வெளிவந்துள்ளது.