ஜா.ரமீஸ். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2008. (சென்னை 600094: பிவிஆர் ஆப்செட்).
vi, 62 பக்கம், விலை: இந்திய ரூபா 35., அளவு: 17.5×12 சமீ.
மலடு, தற்கொலை, முதிர்கன்னியின் முகமூடி, ஞானம் வேண்டாமா, கல்லூரி மாலை உதிர்கிறது, அந்த மூன்று நாட்கள், நான் விதவையா விளங்காதவளா? ஒரு பூ வாடுகிறது, எமனா பிரம்மனா? உயிர்மூச்சு உடைகின்றது, வெள்ளை வானவில், தாய்மை, எனக்குள்ளேயே நான், என்னால் முடியலாம், பிரிவு, நிலவு தேய்ந்தது, ஊமையின் பாஷை, சின்னதாய் ஒரு ஊடல், வழமைகள் இங்கே வாழாவெட்டிகள், போதும் கொல்லாதடி, முதல் இரவு, வேர் அறுக்கிறாள் சொப்பன சுந்தரி, நினைவில் மறையும் தாயகம், ஆசை இரவு, என் குருட்டு உலகம் ஆகிய 25 தலைப்புகளில் இவரது கவிதைகள் இங்கு பதிவுபெறுகின்றன. சமூக அவலங்களும், வேதனைகளும், ஆதங்கங்களும் இவரது கவிதைக் கருக்களாகின்றன.