7498 செந்தமிழ்க் கருவூலம்.

தொகுப்பாசிரியர் விபரமில்லை. யாழ்ப்பாணம்: New Era Literary Reader, 2வது பதிப்பு, 1939, 1வது பதிப்பு, 1937. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை).

99 பக்கம், விலை: 35 சதம், அளவு: 18×12 சமீ.

Treasures of Tamil Literature என்ற ஆங்கில உபதலைப்புடன் வெளியாகியுள்ள இந்நூல் பல்வகைச் சுவையினையும் அளிக்கும் தமிழ்ச் செய்யுள்களைக் கொண்டுள்ளது. பல்வேறு இலக்கியங்களிலுமிருந்து தொகுக்கப்பட்ட இந்நூல் ஆறாம், ஏழாம் வகுப்புகளிலும், ஜே.எஸ்.சி., எஸ்.எஸ்.சி, மற்றிக்குலேஷன் வகுப்புகளிலும் பயிலும் மாணவர்களைக் கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கல்வி (குமரகுருபர சுவாமிகள்), நாண்மலர் கொய்தல் (சிவப்பிரகாச சுவாமிகள்), நிடதர்கோன் சரிதம்-1 (புகழேந்திப் புலவர், அதிவீரராம பாண்டியர்), கம்பராமாயணக் கருப்பொருள், சந்திரமதி புலம்பல் (நெல்லூர் வீரகவிராயர்), மண்டோதரி புலம்பல் (கம்பர்), திண்ணனார் கன்னிவேட்டம் (சிவப்பிரகாச சுவாமிகள்), நிடதர்கோன் சரிதம் -11 (அதிவீரராம பாண்டியர்), ஏதேன் பொதும்பர் (யாழ்ப்பாணம் கனகசபைப் புலவர்), நிடதர்கோன் சரிதம் -111, பருவகால வருணனை (கருணைப்பிரகாச சுவாமிகள்), கலைநாள் நிகழ்ச்சி (வல்லூர்-தேவராசபிள்ளை) ஆகிய நூல்களிலிருந்து தேர்ந்த செய்யுள்கள் இதில் உரையுடன் தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37472).

ஏனைய பதிவுகள்

Ll Book Of Ra Deluxe

Content Prämie Features As part of Book Of Ra Durch Novoline existiert Parece Vergleichbare Spielautomaten? Book Of Madness Kostenlos Aufführen Entsprechend Wählt Man Diesseitigen Kostenlos

15234 குடும்போதயம்: குடும்ப நிதியம்-வழிகாட்டி.

க.திருநாவுக்கரசு (அமைப்பாளர்). புங்குடுதீவு: வட இலங்கை சர்வோதயம், பெருங்காடு, 1வது பதிப்பு, 1992. (யாழ்ப்பாணம்: கு.வி.அச்சகம், 386 மணிக்கூண்டு வீதி). 40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ. இவ்வழிகாட்டியானது, சர்வோதய அமைப்பின்