14588 என்னமோ இருக்கிறம்.

கந்தையா பத்மானந்தன். காரைநகர்: அம்மாத்தை வெளியீட்டகம், வாரி வளவு, 1வது பதிப்பு, 2019. (தெகிவளை: அனுபவ பதிப்பகம், Creaze Digital 14, அத்தபத்து டெரஸ்). vi, 71 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×15 சமீ., ISBN: 978-624-5222-02-5. காரைக்கவி கந்தையா பத்மநாதன் அவர்களின் மற்றுமொரு கவிதைத் தொகுதி. நூலாசிரியர் பல்துறை ஆளுமையுடையவராகத் தன்னை இனம்காட்டிக்கொண்டவர். விஞ்ஞானத்துறையில் ஆரம்ப பட்டத்தினை பெற்றுக்கொண்டவர். தொடர்ச்சியாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பல்வேறு முதுநிலை பட்டக் கல்விநிலைகளை பூர்த்தி செய்துள்ளார். இவரால் படைக்கப்பட்ட இந்நூலில் உள்ள கவிதைகளில் இறையியல், சமூக நடப்பியல் சார்ந்த பிரச்சினைகள் பேசப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

15685 உறவைத் தேடி: வெள்ளிவிழா சிறுகதைத் தொகுதி.

நவரட்ணம் சிறி (தொகுப்பாசிரியர்), நோர்வே: நோர்வே தமிழ்ச் சங்கம், தபால் பெட்டி இலக்கம் 127, 0982 ஒஸ்லோ, 1வது பதிப்பு, ஜனவரி 2008. (நாவலை: அபயன் இராஜதுரை, வசீகரா அட்வர்டைசிங், 98, கோவில் வீதி).