வேலணையூர் ரஜிந்தன் (இயற்பெயர்: பாலசுந்தரம் ரஜிந்தன்). வேலணை: பாலசுந்தரம் ரஜிந்தன், 4ம் வட்டாரம், வேலணை கிழக்கு, 1வது பதிப்பு, ஒக்டோபர், 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). ஒiஎ, 82 பக்கம், விலை: ரூபா 300., அளவு:17.5×12.5 சமீ., ISBN: 978-955-71331-2-6. கவிஞர் ரஜிந்தன் எழுத்தாணி முனையில் பயணப்பட்டிருக்கும் தனது பயணத்தில் பொற்கனவு, நிலா நாழிகை, ஆகிய கவிதை நூல்களைத் தொடர்ந்து மூன்றாவது கவிதைத் தொகுப்பாக இந்நூலை வெளியிட்டுள்ளார். கடந்தகால அனுபவங்கள், நிகழ்காலப் படிப்பினைகள், எதிர்கால எதிர்வுகூறல்கள், என்ற அடிப்படையில் தன் சிந்தனையில் உதித்த முத்துக்களைப் பத்திரப்படுத்தி வைத்திருந்து அவற்றில் “வரம் வேண்டும்” என்ற கவிதையில் தொடங்கி, “மீள் பிரசவம்” என்ற கவிதை ஈறாக 50 கவிதைகளைத் தேர்ந்து கவி மாலையாகக் கோர்த்திருக்கின்றார். இக்கவிஞர் யாழ். நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலயத்தின் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.