வி.நித்தியானந்தம் (பிரதம ஆசிரியர்), கணேசலிங்கன் குமரன் (நிர்வாக ஆசிரியர்). கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½இ டாம் வீதி, 1வது பதிப்பு, ஆடி 2005. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½இ டாம் வீதி). 128 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISSN: 1391-9830. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வி.நித்தியானந்தனை ஆசிரியராகவும், பேராசிரியர்களான கா.சிவத்தம்பி, நா.பாலகிருஷ்ணன், வி.பி.சிவானந்தன் ஆகியோரை ஆலோசகர் குழுவாகவும் கொண்டு வெளியிடப்பட்ட சமூகம் அதன் அசைவியக்கம் பற்றிய ஓர் ஆய்விதழ் இது. இவ்விதழில் ‘கட்டுரைகள்” என்ற பிரிவில் இலங்கை வரலாற்றின் பிரச்சினைகளும் வரலாறு பற்றிய பயமும் (சுதர்சன் செனிவிரட்ண), தமிழில் இலக்கியப் பாட மீட்பு (கார்த்திகேசு சிவத்தம்பி), முரண்பாட்டுத் தீர்வும் பேச்சுவார்த்தையும் (ஜயதேவ உயங்கொட), தகவலும் ஈழத் தமிழ்ச் சமூகத்தின் தகவல் அணுகையும் (எஸ்.அருளானந்தம்) ஆகிய நான்கு கட்டுரைகளும், ‘நூல் ஆய்வு” என்ற பிரிவில் இலங்கையிற் பொருளாதாரக் கொள்கை: எழு வினாக்களும் வாதங்களும் என்ற தலைப்பில் வி.நித்தியானந்தம் அவர்கள் ளுயஅயn முநடநபயஅய பதிப்பித்த நுஉழழெஅiஉ Pழடiஉல in ளுசi டுயமெய: ஐளளரநள யனெ னநடியவநள என்ற நூலுக்கான ஆய்வுக் கட்டுரையும், ‘நூல் விமர்சனம்” என்ற பிரிவில் பேராசிரியர் சி.பத்மநாதன் எழுதிய ‘இலங்கை தேச வழமைகளும் சமூக வழமைகளும்” என்ற நூலுக்கான பொ.இரகுபதியின் நூல் விமர்சனமும், ‘அறிவின் இழப்பு” என்ற பிரிவில் ரெஜி சிறிவர்தன (1922-2004), தர்மரட்ணம் சிவராம்(1959-2005), லால் ஜெயவர்தன (1934-2004) ஆகியோரின் வாழ்வும் பணிகளும் பற்றி கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் நினைவஞ்சலிகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39490).
Golden Nugget Local casino Remark: $2,100 inside the Loans, Bonus Money
Articles Game play Mechanics Signs from the video game Complete List of Merkur Position Video game Do you know the better online slots games for