கொழும்பு 2: தொழிலாளி பிரசுரம், இல.9, டீ மெல் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1965. (கொழும்பு 2: தொழிலாளி அச்சகம், இல.9, டீ மெல் வீதி). 36 பக்கம், விலை: 25 சதம், அளவு: 21×13.5 சமீ. இலங்கை கம்யூனிசக் கட்சியின் தேசிய அமைப்பாளரான நா.சண்முகதாசன் அவர்கள் ‘அக்டோபர் புரட்சியின் பாடங்கள்”, ‘இலங்கைப் புரட்சியும் வாலிபர் இயக்கமும்” ஆகிய தலைப்புகளில் நிகழ்த்திய இரு சொற்பொழிவுகள் இச்சிறுநூ லில் இடம்பெற்றுள்ளன. ‘இலங்கைப் புரட்சியும் வாலிபர் இயக்கமும்” என்ற சொற்பொழிவு, இலங்கை வாலிபர் சங்க சம்மேளனத்தின் நான்காவது தேசிய மாநாட்டில் ஆற்றிய உரையாகும். ‘அக்டோபர் புரட்சியின் பாடங்கள்” என்ற சொற்பொழிவு, மகத்தான அக்டோபர் புரட்சியின் 47ஆவது ஆண்டு நிறைவுவிழா ஞாபகார்த்தமாக 07.11.1964இல் ஆற்றியது.