14325 அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கான அரசாங்க ஆலோசனைகள்.

இலங்கை அரசாங்கம். கொழும்பு: நீதி, அரசியலமைப்பு அலுவல்கள், இன அலுவல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1997. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களம்). vi, 161 பக்கம், 6 அட்டவணைகள், விலை: ரூபா 60.00, அளவு: 24×18.5 சமீ. இதிலடங்கியுள்ள அரசாங்கத்தின் ஆலோசனைகள், அரசும் இறைமையும் மக்களும், பௌத்தமதம், அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும், மொழி, பிரசாவுரிமை, அரச கொள்கை பற்றிய நெறிமுறைக் கோட்பாடுகளும் அடிப்படைக் கடமைகளும், மத்திய நிறைவேற்றுத்துறை குடியரசின் சனாதிபதி, மத்திய நிறைவேற்றுத்துறை சனாதிபதியும், அமைச்சரவையும், மத்திய சட்டமன்றம்- பாராளுமன்றம், மத்திய சட்டமன்றம்-பாராளுமன்றம்-நடவடிக்கை முறையுமதத்துவங்களும், மத்திய சட்டமன்றம்-அரசியலமைப்பைத் திருத்துதல், மக்கள் தீர்ப்பெடுப்பு, வாக்குரிமையும் தேர்தல்களும், அரசியலமைப்புப் பேரவை, பிராந்தியங்களுக்கு அதிகாரத்தைப் பரவலாக்கல், அரச காணி நீர்நிலைகள் மற்றும் கனிப்பொருள்கள், நீதித்துறை-நீதி நிர்வாகத்துக்கான நிறுவனங்கள், நீதித்துறைநீதித்துறைச் சுதந்திரம், நீதித்துறை- உயர்நீதிமன்றத்தினதும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினதும் பிராந்திய மேல்நீதிமன்றங்களினதும் நியாயாதிக்கம், பகிரங்க சேவை, நிதி, பாதுகாப்பு தேசிய பந்தோபஸ்து சட்டம் அத்துடன் ஒழுங்கமைதி, பொதுமக்கள் பாதுகாப்பு, நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர், பொது, நிலைபெயர்கால ஏற்பாடுகள், பொருள்கோடல், ஆரம்பமும் நீக்கமும் ஆகிய 28 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இறுதிப் பகுதியில் பிராந்தியங்கள், நிரல்கள் (ஒதுக்கிய நிரல், பிராந்திய நிரல்), தேசியக் கொடி, தேசிய கீதம், சத்தியம்-உறுதியிடுதல், அட்டவணைப்படுத்தப்பட்ட பகிரங்க அலுவலர்கள், அட்டவணைப்படுத்தப்பட்ட பிராந்திய பகிரங்க அலுவலர்கள் என்பன ஆறு அட்டவணைகளில் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்