14352 கற்க கசடற: அமரர் ஆறுமுகம் தில்லைநாதன் நினைவுமலர்.

தில்லைநாதன் கோபிநாத். கொழும்பு 13: தில்லைநாதன் கோபிநாத், 90/3, புதுச்செட்டித் தெரு, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை). 56 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. அமரர் ஆறுமுகம் தில்லைநாதன் (03.03.1955-02.10.2011) ஆசிரியத்துறையில் பணிபுரிந்தவர். அவரது மறைவின் 31ஆம் நாள் நினைவாக 04.11.2011 அன்றுவெளியிடப்பட்டுள்ள இந்நூல் கல்வித்துறை சார்ந்த பல ஆக்கங்களின் தொகுப்பாகும். திருவள்ளுவர் காட்டும் கல்வி (தமிழ் இணையக் கல்விக் கழகம்), திருவள்ளுவர் பார்வையில் அறிவுடைமை (தமிழ் இணையக் கல்விக் கழகம்), நாலடியார் (தமிழ்க் களஞ்சியம்), அறிவு (தமிழ் விக்கிபீடியா), கல்வியின் நோக்கங்கள் (அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி), இலங்கையின் கல்வித்துறை (கேசரி தகவல் களஞ்சியம், 2011), கற்றலுக்காகக் கற்றல் (க.பேர்னாட்), தரமான கல்விக்குத் தரமான வாசிப்பு (சபா.ஜெயராசா), பரீட்சைக்கான வாசிப்பின் படிமுறைகள் (க.சுவர்ணராஜா), பிள்ளைகளின் கல்வி: பெற்றோர்கள்ஃ ஆசிரியர்களுக்கான சில ஆய்வுக் குறிப்புகள் (சோ.சந்திரசேகரம்), கற்றலைப் பாதிக்கும் காரணிகளும் ஆசிரியரும் (ஆர்.லோகேஸ்வரன்) ஆகிய படைப்பாக்கங்கள் இம்மலரில் தேர்ந்து தொகுக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

14959முத்திரையிற் பண்டிதமணி: முத்திரை வெளியீட்டு விழா மலர்.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபை, உரும்பிராய், 1வது பதிப்பு, டிசம்பர் 1999. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). (8), 56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19

Casino Bonus Liste 2024

Content Betbeast Spielbank: 50 Freispiele Abzüglich Einzahlung Doggo Casino Casino Universe Willkommensbonus As part of meinem Schrittgeschwindigkeit werden die autoren uns exakt qua eigenen weniger

12252 – பொருளியல்: இரண்டாம் பகுதி.

W.D.லக்ஷ்மன், H.M.குணசேகர, C.W.பர்ணாந்து. கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1979. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). (4), 102 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: