எஸ்.ஐ.நாகூர் கனி. கொழும்பு 12: மிஹிந்து மாவத்தை முஸ்லிம் மகா வித்தியாலய நலவுரிமைச் சங்கம், 1வது பதிப்பு, டிசம்பர் 1998. (கொழும்பு 12: காயத்திரி அச்சகம், J.L.G.4 டயஸ் பிளேஸ்). 56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ. மிகுந்து மாவத்தை முஸ்லிம் மகாவித்தியாலயமும் அதன் பெயர்மாற்ற வரலாறும் பற்றிக் கூறும் நூல். ‘ஆசிரியர்கள் வரலாம், போகலாம், அவ்வாறே அதிபர்களும் நியமனமாகலாம் நிறுத்தப்படலாம் இடம்மாறிப் போய்விடலாம். ஆனால் அவ்வூரில் ஜமாத் என்னும் மக்கள் கூட்டமொன்று தேங்கிய நீராக இருக்கின்றது. அங்கே ஒரு பள்ளிவாசல் இருக்கிறது. ஒரு வித்தியாலயம் எழுந்து நிற்கிறது. அங்கே ஊர்ப் பிள்ளைகள் படித்து வருகிறார்கள். எனவே – அவ்வூரின் பொது விடயம் தொடர்பாக, முடிவெடுக்கும் இறைமை அதிகாரம் அந்த ஊரஜமாத்தாருக்கே விடப்படவேண்டும்” என்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் அல்ஹாஜ் எஸ். எம். சஹாப்தீன் அவர்களின் கூற்றுக்கு ஆதரவான கருத்தினை நூலாசிரியர் முன்வைக்கிறார். இதனை எழுதியவர் மேற்படி பாடசாலையின் பழைய மாணவராவார். 1952- 1964 காலகட்டத்தில் இப்பாடசாலையில் கல்வி கற்ற இவர் பின்னாளில் மிஹிந்து மாவத்தை முஸ்லிம் மகா வித்தியாலய நலவுரிமைச் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21044).
Safe & Secure Web based casinos Discover Top Cellular Casinos
Blogs LevelUp Casino — Greatest Cellular Casino App In charge Gaming – Remain secure and safe That have Mobile Casinos & Software Solution Commission Alternatives