மலர் வெளியீட்டுக்குழு. யாழ்ப்பாணம்: வர்த்தக ஒன்றியம், சென். ஜோன்ஸ் கல்லூரி, 1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி வீதி).(8), 89 பக்கம், விலை: ரூபா 15.00, அளவு: 24.5×19 சமீ. இத் தொகுப்பு நூலில் இலங்கையில் கம்பெனி அமைப்பு, இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தின் அமைப்புரீதியான மாற்றங்கள், முகாமைத்துவம், விஞ்ஞான ஆய்வு முறைகளில் நோக்கலின் பயன்பாடு, தொழிற் சங்கங்கள், இலங்கையின் தேசிய வருமானக் கணிப்பீட்டிற்கும் அதன் சென்மதி நிலுவைக் கணிப்பீட்டிற்கும் இடையிலான சில தொடர்புகள், பங்கு வழங்கலும் பறிமுதலும் மீளவழங்கலும், விஞ்ஞானத்தில் ஒப்புமை முறை, மூலதனச் சந்தை, இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி ஒரு மைல் நோக்கு, கணக்கீட்டு எடுகோள்கள் அல்லது எண்ணக் கருக்கள், விஞ்ஞானத்தில் முறையியலின் பங்கும் அதன் அபிவிருத்தியும், வர்த்தக வங்கிகளின் நடைமுறை வைப்புப் பற்றிய ஓர் நோக்கு, இலங்கையின் பொதுப் படுகடன் அமைப்பு, தற்சமனாக்கும் பேரேடு ஆகிய 15 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இந்நூலின் வெளியீட்டுக் குழுவில் கல்லூரி மாணவர்களான சு.சத்தியானந்தன், செ.யு.நரேந்திரபாலன், லெ.ந.சுரேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23646).