க.சட்டநாதன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, வைகாசி 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). viii, 96 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4676- 97-8. “க.சட்டநாதனின் துயரம் தரம் அழகு எனும் இக்கவிதைத் தொகுதி துயரம் தருகின்ற துயரத்துக்கப்பால், அதனுள் ஊறி வெளிப்படும் அழகை இரசிக்கின்றது. துயரத்தை இரசனைக்குரியதாக்குகின்றது. தனிமையும் வெறுமையுமாகிப்போன வாழ்வுக்கு கடந்தகால வாழ்வின் நினைவுகளினூடு ஒத்தடங்கள் கொடுத்து இசைமீட்டுகின்றது. துயரிசையில் வழிந்தொழுகும் வாழ்வின் விளிம்பில் ஒட்டி யிருக்கும் நாட்களைக் கடந்து செல்ல மாய யதார்த்தத்தைப் பயன்படுத்துகின்றது. இத்தொகுதியில் ஐம்பது கவிதைகள் உள்ளன. சூனியப் பெருவெளியின் விரிவினுள் கிடக்கும் தம் வாழ்வைக் கடந்தகால எண்ணங்களால் நிரப்பப் பல கவிதைகள் முயற்சிசெய்கின்றன.” (தி.செல்வமனோகரன், அணிந்துரையில்). முன்னதாக இவர் நீரின் நிறம் என்ற கவிதைத் தொகுதியை ஆடி 2017இல் வெளியிட்டிருந்தவர். ஜீவநதி வெளியீட்டகத்தின் 125ஆவது பிரசுரமாக இந்நூல் வெளிவந்துள்ளது.