ராஜகவி ராஹில். தமிழ்நாடு: அகநாழிகை பதிப்பகம், 26, ஜெயராமன் தெரு, கோகுலபுரம், செங்கல்பட்டு 603001, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). 80 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 100.00, அளவு: 17.5×12 சமீ., ISBN: 978-93-84921-13-2. காதல் ரசம் விரவியிருக்கும் இக்கவிதைத் தொகுப்பில் பேசும் படங்களும் கவிதைகளுக்கு நிகராக கூடுதல் அழகை அள்ளித் தெளிக்கின்றன. காதல் ஒரு இனிய உணர்வு. மணற்கடிகாரத்தின் துகள்கள் மெல்ல இறங்கிப் பரவுவதைப்போல அவ்வுணர்வு நம்முள் பரவும். அந்தத் தருணத்தை முழுவதுமாக விபரித்துவிடுவதென்பது சாத்தியமில்லாத ஒன்று. இருப்பினும் அதனைத் தன் நுட்பமான ரசனைக் கண்கொண்டு பார்த்து விபரிக்கமுனைந்துள்ளார் இக் கவிஞர். அதனை எழுத்தாக்கும்போது மனோலயத்துடன் வசீகரமும் ஈர்ப்பும் ஒன்று சேர்ந்துவிடுகின்றது. கிழக்கிலங்கையின் நிந்தவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகவி ராஹில். பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர் தற்போது சீசெல்ஸ் நாட்டில் பணிபுரிகின்றார்.