14621 நட்சத்திரங்கள் நனைந்துபோன மழைநாட்கள்.

எஸ்.பி.பாலமுருகன். கிண்ணியா: பேனா பப்ளிகேஷன், 1வது பதிப்பு, 2017. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்). 58 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-0932-23-8. பொன்னையா பாலமுருகன் 90களின் பிற்பகுதியில் இருந்து எழுதி வருகிறார். மலையகத்தின் பதுளைக்கு அருகில் குயீன்ஸ் டௌன் தோட்டத்தில் பிறந்த இவர் ஒரு விஞ்ஞான ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். “சொற்களின் சேர்க்கையில் மொழியை செழுமைப்படுத்திப் பார்க்கின்ற அபூர்வ களங்களை உருவாக்குகின்ற இக்கவிஞரின் கவிதைகள் மாயங்களற்ற வெளிகளில் வாசகனை மேய்ந்து விடுகின்ற வித்தைகளைக் கற்று வருகின்றன. இருண்மையைக் கடந்து பொருண்மையை மட்டும் சுமந்துகொண்டு அவை சொல்லுகின்ற யாத்திரீகங்களில் ஒரு தேசாந்திரி போல நம்மை அலையச்செய்து விடுகின்றன” என்கிறார் இந் நூலுக்கு அணிந்துரை வழங்கிய கிண்ணியா சபருள்ளாஹ்.

ஏனைய பதிவுகள்