இ.சு.முரளிதரன். யாழ்ப்பாணம்: மேதினிகா வெளியீடு, 34/3, செட்டித் தெரு, நல்லூர், 1வது பதிப்பு, ஜுன் 2015. (யாழ்ப்பாணம்: ஆகாயம் பதிப்பகம், இமையாணன், உடுப்பிட்டி). xii, 39 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 18×11.5 சமீ., ISBN: 978-955-7790-00-8. ஈழத்து இலக்கியப் படைப்பியலின் தன்மையினை நோக்கும்போது, போர், போரின் வலி, போர்ச் சிதைவு, போரின் அவலம் என நீண்டு வந்து போரின் பின்னரான சமூகத்தின் பெறுமானம் எனத் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு வழியுருவாக்கம் கட்டமைக்கப்பட்டு வருவது தெளிவிற்குட்கிடையானது. இது தவிர்க்க முடியாத ஒரு அம்சம் தான். எமது வாழ்வு போருக்குள்ளானது என்பதால் அதனை விடுத்து இலக்கியம் படைப்பது சாத்தியமற்றது. இருந்தாலும் அதனைத் தாண்டி தண்ணுணர்வுசார் கவிதைகள் தோன்றிய வண்ணம் தான் இருக்கின்றன. இவ்வாறான கடந்தேகு தன்மையானது இ.சு.முரளிதரனுடைய கவிதைகளில் இருப்பது திருப்திக்குரியது (தானா விஷ்ணு, முன்னுரையில்).