முகில்நிலா (ஆசிரியர்), ஜெரா (புகைப்படங்கள்). தமிழ்நாடு: திணை வெளியீட்டகம், மீனாட்சிபுரம், நாகர்கோவில், 1வது பதிப்பு, பெப்ரவரி 2015. (ஆனைக்கோட்டை: றூபன் பிரின்டர்ஸ்). vi, 57 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 10×15.5 சமீ. தன் இன விடுதலைக்காகப் பல இன்னுயிர்களை இழந்த ஈழ மண்ணின் தவிப்பே “பட்டது” என்ற கவிதைத் தொகுப்பாகியுள்ளது. ஓர் அழுகுரல், ஒரு தவிப்பு, ஓர் ஏக்கம் என மனிதத் துயரத்தின் மொத்தமும் கலந்த ஒளிப்படக் கலவைகொண்ட கவிதைகள் இவை. கவிதைகள் முழுவதும் இழப்பின் வலிகளை நமக்கு உணர்த்துகின்றன. முகில்நிலாவின் கவிதை வரிகளுக்கு ஜெராவின் புகைப்படங்கள் அழுத்தம் தருகின்றன. “வலி, வேதனை, விரக்தி, அவமானம், ஆர்ப்பரிப்பு எல்லாவற்றையும் சேர்த்துக் கட்டிய கூடாய் நாம். கண்மூடி இருக்கும் என் சமூகத்தின் நினைவிற்கு மட்டுமல்ல இன்றும் நாளையும் இனிவரும் நாட்களிலும் கடத்தப்பட வேண்டிய கட்டாயமாக-பட்டது. இந்தப் பட்டதுக்காக நாம் பட்டிருக்கின்ற வலி முதல் குழந்தைப் பிரசவிப்பில் ஒரு அன்னை படுகின்ற வலிக்கும் அதிகமானது” (முகில்நிலா, வன்னி).