14675 செய்னம்பு நாச்சியார் மான்மியம்.

அப்துல் காதர் லெப்பை. கல்ஹின்னை: மணிக்குரல் பதிப்பகம், 1வது பதிப்பு, ஜுலை 1967. (பண்டாரவளை: முகைதீன்ஸ் அச்சகம்). (12), 55 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 19×13 சமீ. “மணிக்குரல்” சஞ்சிகையில் அங்கதச் சுவையுடன், ஜனாப் அப்துல் காதர் லெப்பை அவர்களால் கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களின் திருமணச் சம்பிரதாயங்களை முன்வைத்து எழுதப்பட்ட மான்மியம். இவ்வழகிய நூலிலே கதை இருக்கிறது, கவிதை இருக்கிறது, சமூகவியலும் அடங்கியிருக்கின்றது. கவிஞரது இளமைக் கால நினைவுகளும் அடங்கியுள்ளன போலும். அந்த வகையிலே இதனை ஒரு சமுதாய வழக்கக் குறிப்பேடு (Social document) எனத் துணிந்து கூறலாம். சிறந்த சிந்தனையாளரும், கவிஞருமான கவிஞர் அப்துல் காதர் லெப்பை (1913-1984) கிழக்கிலங்கையின் காத்தான்குடிக் கிராமத்தைத் தாயகமாகக் கொண்டவர். ஒரு ஆசிரியராகப் பணியாற்றிய இவர் கல்வித்துறையினரால் பெரிதும் போற்றப்பட்டவர். மணிக்குரல் பதிப்பகத்தினரின் “அருகிவரும் ஆசாரங்கள்” என்ற தொடரில் வெளிவரும் நூல் இது. அருகிவரும் ஆசாரங்கள் -1 என்ற பிரிவில் மணம் சரிகாண் படலம், செப்பு அனுப்பும் படலம், நாச்சியார் படலம், மணம் பேசு படலம், மணமகன் படலம், மணமகள் படலம், மௌலூதுப் படலம், பரசம் கொண்டுபோகும் படலம், தாலிகட்டும் படலம், நீராட்டும் படலம், பெண்பார்க்கும் படலம், செய்னம்பு சீறிய படலம், பிணக்குத் தீர்த்த படலம், மருமகன் படலம், சோதனைப் படலம், நாச்சி அறிவுபெற்ற படலம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அருகிவரும் ஆசாரங்கள் -2 என்ற பிரிவில் காட்டாறு பாவா படலம், கருமாரிப் படலம், சுன்னத்துக்கலியாணப் படலம், ஓதுகிற பள்ளிப் படலம், நோன்பில் ஹதீது சொல்லும் படலம், ஹஜ்ஜுப் பெருநாட் படலம், களிக்கம்படித்தல் படலம், பள்ளிவாசற் படலம், வழக்குச் சொல் விளக்கம் ஆகியன இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

14122 கைதடி மேற்கு இணுங்கித்தோட்டம் அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானம் முத்துக்குமரன் மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர்.

சி.மதீசன் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: இணுங்கித்தோட்டம் அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானம், கைதடி மேற்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xxix, 111 பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,

14751 என்னைக் காப்பாற்றிய காதலியின் துல்லிய பார்வை (நாவல்).

அமிர்தா ராஜகோபால். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2013. (சென்னை: ஸ்கிரிப்ட் ஆப்செட்). vi, 306 பக்கம், விலை:

14116 கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபை கொழும்பு: அரைநூற்றாண்டு நிறைவு 1925- 1975: பொன்விழா மலர்.

கு.குருசுவாமி, ச.த.சின்னத்துரை (பத்திராதிபர் குழு). கொழும்பு: கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபை, 2வது பதிப்பு, ஜுன் 1976, 1வது பதிப்பு, மார்ச் 1976. (கொழும்பு 12: நியு லீலா அச்சகம்). (50) பக்கம், புகைப்படங்கள்,