யோகா யோகேந்திரன். திருக்கோவில்: திருமதி யோகா யோகேந்திரன், யோகவாசா, 1வது பதிப்பு, 2015. (அக்கரைப்பற்று: மல்ட்டி ஓப்செட் அச்சகம்). xvi, 153 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-41546-1-2. எழுத்தாளர் ஓய்வுநிலை ஆசிரியை கலாபூஷணம் மண்டூர் அசோகா அவர்களின் அறிமுகவுரையுடன் வெளிவந்துள்ள இச்சிறுகதைத் தொகுப்பில், அவர்கள் அப்படித்தான், பிரிவுகளும் பிணைப்புக்களும், விதியின் கட்டளை, கனவு பலிக்குமா?, விட்டகுறை தொட்டகுறை, நட்பென்பது வரமா சாபமா?, உறவைத் தேடி, குற்றமென்ன நாம் செய்தோம், கங்காரு நாட்டிற்கொரு கனவுப் பயணம், பிள்ளையார் சுழி, தாய் மண், மூலதனம் ஆகிய சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61354).