வில்வம் பசுபதி. யாழ்ப்பாணம்: The Hindu Board of Education, கலாசாலை வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2006. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 56, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). iv, 98 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 18×13 சமீ. இத்தொகுதியிலுள்ள சிறுகதைகளிற் பெரும்பாலானவை அமரர் பசுபதி அவர்களால் 1989-1990 காலப்பகுதியில் எழுதப்பட்டு சமய மஞ்சரியாக வெளிவந்த “ஞானக்கதிர்” சஞ்சிகையில் வெளிவந்தவை. தெய்வத்தைத் தொழுதல், பெரியோரைப் பேணல், அறஞ் செய்தல் முதலியவற்றை வலியுறுத்தும் அதே வேளை, கள்ளுண்பதாலும் கையூட்டுப் பெறுவதாலும் வரும் கேடுகளை இக்கதைகள் தெளிவுபடுத்துகின்றன. இத்தொகுப்பில் இறைவற்கொரு பச்சிலை (புரட்டாதி 1989), நிழல் நிஜமாகிறது, வேண்டத்தக்க தறிவோய் நீ (மார்கழி 1989), மனம் வெளுக்க வழியில்லையே, வெள்ளிக்கிழமை விரதம் (சித்திரை 1989), நாளை முதல், மரண சாஸனம், வற்றாப்பளைச் சாமியார், கொல்லாதே மன்னித்துவிடு, நாய் கடிச்சிட்டுது செல்லத்துக்கு, இரடி பில்டிங், மண்வாசனை ஆகிய 13 கதைகள் இடம்பெற்றுள்ளன.