14682 ஈழத்து உளவியற் சிறுகதைகள்.

கே.எஸ்.சிவகுமாரன் (ஆசிரியர்), லேனா தமிழ்வாணன் (பதிப்பாசிரியர்). சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2018. (சென்னை 94: ஆதிலட்சுமி பிரிண்டேர்ஸ்). xxii, 74 பக்கம், விலை: இந்திய ரூபா 70.00, அளவு: 17.5×12 சமீ. இத்தொகுப்பில் உறைவிடம் மேலிடம், தாழ்வு மனப்பான்மை, இனம் இனத்துடன், அவர்கள் உலகம், பகட்டு, இழை, குறிஞ்சிக் காதல் ஆகிய ஏழு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. மட்டக்களப்பு-புளியந்தீவில் சிங்களவாடி என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் கே.எஸ்.சிவகுமாரன். பெற்றோர்கள் திருகோணமலையையும் மட்டக்களப்பையும் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இலங்கையிலும் பின்னர் ஓமானிலும் 1998 முதல் 2002ஆம் ஆண்டு வரை ஆங்கில இலக்கிய ஆசிரியராகப் பணியாற்றிய இவர் மாலைத்தீவுகளிலும் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஈழத்துத்தமிழ்ப் படைப்பாளிகளை ஆங்கில ஊடகங்களின் வாயிலாக சிங்கள இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்துவதில் இவர் முக்கிய பங்களிப்பினை வழங்கிவருபவர்.

ஏனைய பதிவுகள்

12786 – பகையாலே உதயமான உறவு: நாடகங்கள்.

. இராகி (இயற்பெயர்: இரா. கிருஷ்ணபிள்ளை). காரைதீவு-2 (கிழக்கு மாகாணம்): இரா.கிருஷ்ணபிள்ளை, மலரகம், நடராசானந்தா வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2008. (காரைதீவு-12: மா.புஷ்பநாதன், நிதுஸ் ஓப்செற் அச்சகம்). (6), 97 பக்கம், விலை:

14588 என்னமோ இருக்கிறம்.

கந்தையா பத்மானந்தன். காரைநகர்: அம்மாத்தை வெளியீட்டகம், வாரி வளவு, 1வது பதிப்பு, 2019. (தெகிவளை: அனுபவ பதிப்பகம், Creaze Digital 14, அத்தபத்து டெரஸ்). vi, 71 பக்கம், விலை: ரூபா 250., அளவு: