14687 ஒன்பதாவது குரல்.

தாட்சாயணி (இயற்பெயர்: திருமதி பிரேமினி பொன்னம்பலம்). அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஐப்பசி 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). viii, 168 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-0958- 17-7. இச்சிறுகதைத் தொகுதியில் ஒரு பிள்ளையாரின் கதை, சிவப்புக்கோடு, சாருமதியின் வீடு, தொடராத சொந்தங்கள், பொய்மையும் வாய்மையிடத்து, ராகவி ஆகிய நான், நாளை இனி யாரோ?, இரண்டு ஆசிரியர்கள்-இரண்டு மாணவிகள், நர்மதாவின் கடிதங்கள், முடிச்சிடப்பட்ட மூன்று காலங்கள், உள்ளே தான் உள்ளாயோ?, நியாயங்களும் கேள்விகளாகின்றன, மெட்டி, எல்லாப் பாதையிலும் முட்கள், ஒன்பதாவது குரல் ஆகிய பதினைந்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இலங்கை அரச நிர்வாக அதிகாரிகளாக இருந்துகொண்டு ஆக்க இலக்கியப் படைப்பாளிகளாகவும் மிளிரும் பெண் எழுத்தாளர் வரிசையில் தாட்சாயணி குறிப்பிடத்தக்கவர். இவரிடம் தெளிவான சமூகப் பார்வை இருக்கின்றது. நீரோடை போன்று பிசிறில்லாத மொழி ஓட்டம் இவருடையது. தனது ஆக்க இலக்கியப் படைப்புகளை சராசரி வாசகர்களும் வாசித்து ரசிக்க வேண்டும் என்னும் இலக்கிய சமூக அக்கறை இவரது எழுத்துக்களில் புலப்படுகின்றது. இந்நூல் ஜீவநதி வெளியீட்டகத்தின் 128ஆவது பிரசுரமாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

16146 நடராஜப் பத்து-சிவ நாமாவழியுடன்.

சிறுமணவூர் முனுசாமி (மூலம்), சோதிடவிலாச புத்தகசாலை (பதிப்பு). யாழ்ப்பாணம்: சோதிட விலாச பத்தகசாலை, கொக்குவில், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: சோதிட விலாச அச்சியந்திரசாலை, கொக்குவில்). (4), 24 பக்கம், விலை: