14691 குதிரைக்காரன்: சிறுகதைகள்.

அ.முத்துலிங்கம். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (சென்னை 600005: மணி ஓப்செட்). (10), 11-151 பக்கம், விலை: இந்திய ரூபா 120., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978- 93-81969-10-6. நவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் வீச்சையும் சேர்ப்பது அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களாகும். இந்நூலில் அவரது 15 சிறுகதைகள் அடங்கியுள்ளன. இவற்றின் நிகழ்புலங்கள் அமெரிக்கா, கனடா, ஆப்பிரிக்கா, இலங்கை என மாறினாலும் கதை மாந்தர்களின் மனிதநேயமும் மகிழ்ச்சியும் துயரமும் தியாகமும் மாறாமல் முற்றிலும் பரிச்சயமில்லாத தருணங்களைத் தமிழ் வாசகர் மனதில் நிறுத்துகின்றன. முத்துலிங்கத்தின் புனைவின் நிழல் யதார்த்தத்தை மறைப்பதில்லை. அவற்றை அதன் மந்தகதியிலிருந்து விடுவித்து பிரகாசமடையவைக்கிறது. அவரின் அனுபவங்கள் ஒரு மென்மையான ரசவாதத்தால் வாழ்வின் தரிசனமாகிவிடும் வித்தை திரும்பத் திரும்ப நிகழ்கின்றது. இதில் குதிரைக்காரன், குற்றம் கழிக்கவேண்டும், மெய்க்காப்பாளன், பாரம், ஐந்துகால் மனிதன், ஜகதலப்ரதாபன், புளிக்கவைத்த அப்பம், புதுப்பெண்சாதி, 22 வயது, எங்கள் வீட்டு நீதிவான், தீர்வு, எல்லாம் வெல்லும், மூளையால் யோசி, ஆச்சரியம், கனகசுந்தரி ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட தேர்ந்த சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

100 percent free Ports On the web

Articles Richy Character Casino Join Our #step one Boku Gambling enterprise To own 2024 Subscribe Our very own Mobile Gambling establishment: Pay That have Cellular

Roulette Online Optreden

Volume N1 Gokhal Trede Inzetten Flevoland Unibet Online Verwedden Cs Bordspe Alhier Ook Eenmaal Zoals Gij Promoties Op Casinopromotions Eu Naarmate u me slijt door slijpen,

12103 – சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் திருப்பாற்கோவை: 22ஆவது ஆண்டு மண்டலபூஜை சிறப்பு மலர்-1997.

க.ரவீந்திரகுமார் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 13: சபரிமலை தீர்த்த யாத்திரைக் குழு, அகில இலங்கை ஐயப்ப சேவா சங்கம், இல. 11, ஆட்டுப்பட்டி ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 1997. (கொழும்பு 14: விக்ரம் பிரின்டர்ஸ்,