ஜேகே (இயற்பெயர்: ஜெயக்குமரன் சந்திரசேகரம்). சுவிட்சர்லாந்து: ஆதிரை வெளியீடு, Neugasse 60, 8005 Zurich, 1வது பதிப்பு, ஜனவரி 2020. (தமிழ்நாடு: அச்சக விபரம் தரப்படவில்லை). 214 பக்கம், விலை: இந்திய ரூபா 170.00, அளவு: 20×13 சமீ. இச்சிறுகதைத் தொகுப்பில் கனகரத்தினம் மாஸ்டர், உஷ் இது கடவுள்கள் துயிலும் தேசம், சந்திரா என்றொருத்தி இருந்தாள், சைக்கிள்கடைச் சாமி, தூங்காத இரவு வேண்டும், விசையறு பந்து, சமாதானத்தின் கதை, நகுலனின் இரவு, மறை சாட்சி, வெம்பிளி ஒஃப் ஜஃப்னா, விளமீன் ஆகிய 11 கதைகள் தேர்ந்து தரப்பட்டுள்ளன. ஜேகே (ஜெயக்குமரன் சந்திரசேகரம்) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தற்பொழுது அவுஸ்திரேலியாவில் வசிக்கிறார். படலை இணையத் தளத்தில் வெளியாகும் இவருடைய நனவிடைதோய்தல் எழுத்துக்களின் வாயிலாக இலங்கையிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் நன்கு அறியப்பட்டவர். இவர் ஈழப்போர்ச் சூழலின் வாழ்வனுபவத்தை பால்யத்தின் பார்வைக்கூடாக எழுதிய “என் கொல்லைப்புறத்துக் காதலிகள்” என்ற தொகுப்பும் அரசியல் விஞ்ஞானப் புனைவான “கந்தசாமியும் கலக்சியும்” என்ற நாவலும் வாசகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தன. இறுக்கமான ஒரு சமூகத்தில் பேணப்படுவதாக நம்பப்படும் விழுமியங்களும் கட்டுப்பாடுகளும் முரண் காரணிகளால் ஒன்றுமில்லாததாக ஆக்கப்படும் காலக் கட்டாயத்தை இத்தொகுப்பில் உள்ள பதினொரு கதைகளும் பேசுகின்றன.