14747 உறவும் பிரிவும்.

மு.ளு.ஆனந்தன். யாழ்ப்பாணம்: இணுவில் தமிழ்மன்ற வெளியீடு, இணுவில், 1வது பதிப்பு, நவம்பர் 1964. (சுன்னாகம்: நாமகள் அச்சகம்). (2), 61 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 20×13.5 சமீ. காதலை முதன்மைப்படுத்தும் இக்குறுநாவலில் வரும் சபேசன்-ராஜி காதல் ஜோடியின் காதலை பொருளாதார ஏற்றத்தாழ்வு, மத வேறுபாடு என்பவை பிரிக்கின்றன. சபேசனை ராஜி காதலிக்கிறாள். தானாகவே மனதைவிட்டுச் சொல்லவும் செய்கிறாள். நிறைவேறும் என நம்பியிருக்கும் வேளையில் தாயின் விருப்புக்கேற்ப, பணக்காரப் பெண்ணான ரஞ்சிதத்திற்கு சபேசன் தாலி கட்டுகின்றான். ரஞ்சிதம் ஒழுக்கம் கெட்டவள் என்று சில நாட்களிலேயே தெரியவருகின்றது. தாய் மரணிக்க, ரஞ்சிதமும் மரணிக்க, ராஜி கன்னியாஸ்திரி மடத்தில் சேர, தன் உறவுகளைப் பிரிந்து, முன்பொரு நாள் ஒரு புத்தபிக்கு சொன்ன ஆரூடத்தின்படி தனிமரமாகின்றான் சபேசன். இரவீந்திரரையும் திருவள்ளுவரையும் இடைக்கிடையே மேற்கோள் காட்டி நிற்கும் நாவலாசிரியர் இந்நாவலில் நற்பண்புகளைப் போதிக்கும் வழிநடையொன்றை பின்பற்றுகின்றார். இந்நாவலில் வரும் கதாபாத்திரங்கள் உயிரோட்டம் மிக்கவை. எழுத்தாளனும் மாணவனுமான சபேசன், ஓய்வுபெற்ற ஒரு ஆசிரியரின் நான்காவது பிள்ளையான ஜோசப்பின் என்ற ராஜி, கல்லூரிப் பெண்களாக வரும் பாமா, லூஸி, பத்மா, மார்க்கிரட் முதலானோர், பணத்திமிரும் பொறாமை நெஞ்சமும் கொண்ட ரஞ்சிதம், பிறமதத்தவளை மருமகளாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் சபேசனின் தாய் சரஸ்வதி, காதலைத் தியாகம் செய்து கற்பைக் காத்துக்கொள்ளும் கோமதி என எல்லோரும் இக்கதையில் மாத்திரமல்ல எம்மிடையே அன்றாடம் நடமாடுபவர்களே. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 018638).

ஏனைய பதிவுகள்

Online casino Software Business

Articles Totally free Cent Harbors Modern Jackpot Slots You might spin these types of modern old tiger hosts free of charge, but if you twist