கலையார்வன் (இயற்பெயர்: குருசுமுத்து இராயப்பு). யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர், 165 வேம்படி வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2016. (பண்டத்தரிப்பு: ஜே.எஸ்.பிரிண்டர்ஸ்). xxiv, 216 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 400., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-0197-06-4. இலங்கையின் தேசிய இனங்களுக்கிடையே மனித நேய நோக்கையும் செயற் பாட்டையும் வளர்க்கும் பாங்கில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. படைப்புக்கான மையக்கருத்தை விபரிக்கும் வேளையில் சமூகவியல் பற்றியதும், கதையின் களம்சார்ந்த புவியியல் பற்றியதும், இயற்கை பற்றியதுமான விபரிப்புகளையும் சுவையாகப் பரவவிட்டுள்ளார். குருசுமுத்து இராயப்பு (கலையார்வன்) 10.11.1949 இல் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். அரங்கியல், கவிதை, கட்டுரை, சிறுகதை மற்றும் பல்துறை சார்ந்த எழுத்தாக்கங்களில் தடம் பதித்தவர். 1960-1981 வரை 40 இற்கும் மேற்பட்ட நாடகங்களை இவர் எழுதியுள்ளார். 1968 இல் குருநகர் இளைஞர் கலைக்கழகத்தால் வெளியீடு செய்யப்பட்ட “உலகின் ஒளி” என்னும் தொகுப்பு நூலின் ஆசிரியராகப் பணியாற்றிய கலையார்வன், 1969 இல் குருநகர் இளைஞர் கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட “நம் ஒளி” எனும் சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். யாழ். குருநகர் மண்மணம் கமழும் இவரது பல்வேறு ஆக்கங்கள், வரலாற்று ஆவணப்படைப்புகள் நூலுருவில் வெளிவந்துள்ளன. மேலும் கடலலைகள், கொஞ்சும் குருநகர், குருதிக் குளியல்கள் போன்ற பிரபல நூல்களையும் இவர் எமக்களித்துள்ளார். இவரது ஆக்கங்கள் பல வெளிநாடுகளிலும் வெளியீடு செய்யப்பட்டுள்ளன. இலக்கிய நூல் பரிசுப் போட்டியில் 2006 இற்கான பல்துறைப் பரிசு இவருக்கு கிடைத்தது.
Casinos on the internet Southern Africa 2024, Online gambling Websites SA
Content Vegas Now Casino opinion The way i Price and you will Comment an informed Internet casino Web sites in the Asia Create a casino