14826 காற்சட்டை அணியும் பெண்மணி: சீனக் குறுநாவல்.

வாங் நுன்சி (சீன் மூலம்), ந.சுரேந்திரன் (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: நதி வெளியீட்டகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1986. (அச்சக விபரம் தரப்படவில்லை). 32 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 20×13.5 சமீ. நான்கு அத்தியாயங்களில் எழுதப்பெற்ற குறுநாவல். 60 வயதான சூ செங் தைரியமற்ற எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய ஒருவர். அவரது மனைவி லீ குயலான் அவரது குடும்பத்தில் ஒரு காற்சட்டை அணியும் பெண்மணி. வீட்டின் தலைவராக அவரது கணவருக்குப் பதிலாக லீ குயலான் தனது பெயரையே பதிவுசெய்திருப்பதிலிருந்து அவர் தாங்கும் குடும்பப் பொறுப்பு புலனாகும். அவரது கிராமத்தில் விவசாயிகளிடையே குழாய்க் கிணறு தோண்டும் ஆவல் ஏற்படுகின்றது. சூ செங் அதற்கு விருப்பப்பட்டாலும் அதனை மேற்கொள்வதற்கான மனத்தைரியம் அவருக்கில்லை. அவரது மனைவி லீ குயலான் கணவர் கொண்ட மூடநம்பிக்கைகளுக்கும் நம்பிக்கையீனங்களுக்கும் மத்தியில் சீன அதிகாரிகளின் இடையூறுகளையும் தீரத்துடன் சமாளித்து எவ்வாறு தன் காணியில் கிணற்றை அமைத்துத் தம் வீட்டுத் தண்ணீரை கணவனுக்கு வழங்குகின்றார் என்பதே இக்குறுநாவலின் கதையாகும். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூ லகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 001397).

ஏனைய பதிவுகள்