தேவகாந்தன். கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், 202, கடற்கரைச் சாலை, 1வது பதிப்பு, ஜுலை 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல.39, 36ஆவது ஒழுங்கை). xi, 167 பக்கம், விலை: ரூபா 550., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955- 3491-21-3. அவ்வப்போது தேவகாந்தனால் எழுதப்பெற்று சஞ்சிகைகள், இணையத்தளங்களில் பிரசுரமான இலக்கியக் கட்டுரைகளின் தேர்ந்த முதலாவது தொகுப்பு. சமகால தமிழ்க் கவிதைகளின் செல்நெறி குறித்து/ சமகால தமிழ்க் கவிதைகளின் செல்நெறி குறித்து மேலும் சில விவரணங்கள்/ ஈழத்துக் கவிதை: மரபுக் கவிதையிலிருந்து புதுக்கவிதை ஈறாக தொடரும் மரபு/ ஈழத்துப் புதுக்கவிதைத் துறையின் புதிய பிரதேசம்: அஸ்வகோஷின் “வனத்தின் அழைப்பு” குறித்து/ ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம் வளர்ச்சி போக்குகள் பற்றி/ யதார்த்தப் போக்கும் வட்டார வழக்கும்: வல்லிக்கண்ணனது நாவல்களை முன்வைத்து/ தமிழ் நாவல் இலக்கியம்/ சமகால தமிழ் நாவல் இலக்கியத்தில் ஜெயகாந்தன் நாவல்களின் வகிபாகம்/ நா.பா.வின் எழுத்துக்களில் தனி மனித அறம்/ பதிப்பு, படைப்பு, வாசிப்புகளின் பொது இயங்குதளமும் சமகால ஈழத்து இலக்கியத்தில் அவற்றின் தாக்கமும் தாக்கமின்மையும்: மொழிவெளியினூடான ஓர் அலசல்/ படைப் பினூடாக படைப்பாளியை அறிதல்: மு.த. குறித்தான ஓர் இலக்கிய விசாரணை/ அரசியல், சமூக எதிர்ப்புநிலைகளின் இன்னொரு முகாம்: பின்-காலனித்துவ இலக்கியம் குறித்து/ புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்/ தமிழ்ப் புனைகதைப் பரப்பில் புலம்பெயர்ந்தோர் படைப்புக்கள்/ மலேசிய சிறுகதைகளின் வளர்ச்சி-தேக்கம்-நிவாரணம்/ கனடாவில் இலக்கியச் சஞ்சிகைகள்: அவற்றின் எழுச்சி வீழ்ச்சிகளின் காரணம் குறித்து ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 16 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.