14853 நோக்கு: ஆய்வுக் கட்டுரைகள்.

சோ.பத்மநாதன் (மூலம்), தி.செல்வமனோகரன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: தூண்டி இலக்கிய வட்டம், 141, கேணியடி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2019. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xvi, 232 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955- 52603-2-9. கவிஞர் சோ.பத்மநாதன் அவர்களின் 80ஆம் அகவை வெளியீடாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. கவிஞர் சோ.ப. எழுதியிருக்கும் பல்வேறு திறனாய்வுக் கட்டுரைகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 24 ஆக்கங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கவிதை என்னும் கலை, தமிழ்க் கவிதை மரபில் பாரதி ஏற்படுத்திய திருப்பம், ஓசை தரும் இன்பம், புதுக் கவிதைக்கும் ஓசை உண்டு, கம்பன் சொல்வளம், இனிமை குலவும் ஒரு புகழ்ப்பா, பெரியபுராணம்: ஒரு குடிமக்கள் காப்பியம், பதினொராந் திருமுறையில் இலக்கிய உத்தி, “பாலை நெய்தல் பாடியது”-ஒரு பார்வை, ஆறுமுக நாவலர் செய்த பைபிள் மொழிபெயர்ப்பு, தமிழ்க் கவிதை மொழிபெயர்ப்பில் ஒரு முன்னோடி: தாயுமானாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஐசாக் தம்பையா, போப் செய்த திருவாசக மொழிபெயர்ப்பு: ஒரு மதிப்பீடு, கவிதை மொழிபெயர்ப்பு: சாத்தியப்பாடுகளும் சவால்களும், ரிது சம்ஹாரமும் பருவ மாதரும், தேவகாந்தனின் “கதாகாலம்” மற்றொரு மகாபாரத மறுவாசிப்பு, பிளேற்றோவும் திருவள்ளுவரும், சொஃபொகிளிஸின் அன்ரிகனி, ஒரு பாவையின் வீடு, மு.பொ.வின் கவிதைக் கோட்பாடும் படைப்புலகமும், ஈழத்துப் போர்க்காலக் கவிதை, ஈடிணையில்லாக் கதைசொல்லி, ஆக்க சிந்தனை, நமது கல்வி முயற்சிகள்: முடிவுறாத பயணங்கள், தாய்மொழி பேணாத தமிழர்கள் ஆகிய தலைப்புகளில் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

12439 – அகில இலங்கை தமிழ்மொழித் தினம் 1990.

வெ.சபாநாயகம் (மலர்க் குழு சார்பாக). கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, கல்வி இராஜாங்க அமைச்சு, 1வது பதிப்பு, 1990. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161, கடற்கரைத் தெரு). (52) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: