க.ஜெயவீரசிங்கம், க.சபாஜிதன், ப.தங்கவடிவேலு (மலர்க்குழு). முல்லைத்தீவு: அருள்மிகு ஸ்ரீ வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் தேவஸ்தானம், வற்றாப்பளை, 1வது பதிப்பு, 2011. (வவுனியா: எஸ்.பி.எஸ். ஆதவன் அச்சகம், மில் வீதி/ தண்ணீரூற்று: கலைவாணி அச்சகம்).(116) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×20 சமீ. இச்சிறப்பு மலரில் ஆலயமும் பிரதேச வழமைகளும் (மு.குகதாசன்), வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் பொங்கல் கிரியா கரும விளக்கம் (சி.பாலகிருஷ்ணன்), அறநெறியும் நமது சமூக விழுமியமும் (த.சிவபாலன்), வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கோவில் பொங்கலும் கதிர்காமக் கரை யாத்திரையும் (ந.மயில்வாகனம்), வாழ்த்துப் பாமாலை (பிரம்மஸ்ரீ செ.சண்முகநாதன்), வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் எதிர்கொண்ட சவால்களும் அவற்றின் பின்னான வளர்ச்சியும் (சு.கிருஷ்ணமூர்த்தி), என் தாயின் நினைவில் (ப.வரதன்), வற்றாப்பளைக் கண்ணகியின் அற்புதம் (கி.உதயகுமார்), ராஜகோபுரம் (ச.லலீசன்), ஈழத்து சக்தி வழிபாட்டு மரபில் வன்னிப் பிராந்தியம் (ஞானவேல்), சக்தி வழிபாடு (ஆ.வேதநாதன்), சிலம்பு கூறல் (அரியான் பொய்கை), அம்மன் ஆலய பூசாரிமார்களுக்கு அம்மன் காட்டிய அற்புதங்களும் வரலாறும் (கு.கிருஷ்ணபவன்) ஆகிய படைப்பாக்கங்களும், இறுதிப் பகுதியில் ஆலயக் காட்சிகள் கொண்ட புகைப்படத் தொகுப்பும் இடம்பெற்றுள்ளன.