செ.இரத்தினப்பிரகாசம் (பதிப்பாசிரியர்). கொக்குவில்: கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் (புதுக்கோவில்), 1வது பதிப்பு, நவம்பர் 2003. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). xviii, 94 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ. இந்நூலில் செ.வேலாயுதபிள்ளை எழுதிய நால்வர் வழிபாடு (வரலாற்றுப் பின்னணி, சைவ வரலாறு, நால்வர் வாழ்க்கையும் சாதனையும் போதனையும், திருநாவுக்கரசர் வாழ்க்கைச் சுருக்கம், திருஞானசம்பந்தர் வாழ்க்கைச் சுருக்கம், சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்க்கைச் சுருக்கம், மாணிக்கவாசக சுவாமிகள் வாழ்க்கைச் சுருக்கம், நால்வர் தோத்திரப் பாடல்கள்), பண்டிதர் ச.சுப்பிரமணியம் எழுதிய நடராஜமூர்த்தி துதி (நடேச மகிமா தமிழாக்கம்), கா.நீலகண்டன் எழுதிய கொக்கூர் மும்மணி மாலை, ச.சபாரத்தின முதலியார் இயற்றிய கிருபாகர சுப்பிரமணியர் ஊஞ்சல் ஆகிய பக்தி இலக்கியங்கள் இடம்பெற்றுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 037072).