மலர்க் குழு. பிலியந்தலை: மலர் வெளியீட்டுக் குழு, நுகேகொட தமிழ் மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, 2006. (அச்சக விபரம் தரப்படவில்லை). (6), 114, (18) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ. தனது 38 ஆண்டுக் கல்விப்பணியை நிறைவுசெய்யும் வகையில் நுகேகொட தமிழ் மகா வித்தியாலய அதிபராகவிருந்து ஓய்வுபெற்ற வேளையில் இடம்பெற்ற பாராட்டு விழாவின்போது அதிபர் வே.சண்முகராஜா அவர்களுக்கு வழங்கப்பெற்ற வாழ்த்து மலர். தனது 17 ஆண்டு அதிபர் சேவையில் இவர் இறுதி பத்தாண்டுகளை நுகேகொட தமிழ் மகா வித்தியாலயத்திலேயே பணியாற்றியுள்ளார். இம்மலரில் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு, அறநெறி வளர்த்த அதிபர் (Ramakrishna Mission), நாம் மதிக்கும் நடுநிலையாளர் (மௌலவி சுஜப் இப்றாகீம்), முன் மாதிரியான அதிபர் – (போதகர் இன்பநாதனும் குடும்பத்தினரும்), உதவி செய்வதில் முதன்மையானவர் (வண. போதிதம்ப பிக்கு), தன்னலம் கருதாத சமூகத்தின் விடிவெள்ளி (பெ.இராதாகிருஷ்ணன்), தன்னலங் கருதா சமூக சேவையாளன் (சோ.சந்திரசேகரன்), சேவையால் உயர்ந்த செம்மல் (மா.சின்னத்தம்பி), முகாமைத்துவத்திற்கு இலக்கணம் வகுத்த அதிபர் (திருமதி க.சந்திரமோகன்), உயிரோட்டமுள்ள சிந்தனைகளால் உயர்ந்தவர் (M. Karunanithy), Devoted Teacher: Dedicated Principal (V. Shanmugarajah), கல்வி உலகிற்கு ஒரு வரப்பிரசாதம் (மா.செல்வராஜா), அறிவுத்திறனும் ஆக்கபூர்வ சிந்தனைத் திறனும் மிக்க அதிபர் (உடுவை எஸ்.தில்லை நடராசா), அஞ்சா நெஞ்சமிக்க அதிபர் (வெற்றிவேலு சபாநாயகம்), சண்”… சில நினைவுகள் (தை.தனராஜ்), சீரிய பணியாற்றிய சிந்தனையாளர் (என். நடராஜா), பாரிதி காட்டிய வழி வந்த அதிபர் (கே. றமணி), இலங்கையில் ஆளணி விருத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளர் (உ. நவரத்தினம்), ஆசிரியத்துவத்திற்கு மகிமை சேர்த்தவர் (குமாரசாமி சோமசுந்தரம்), வாண்மை ரீதியாகவும் கல்வி ரீதியாவும் வெற்றி கண்டவர் (ச.நா.தணிகாசலப் பிள்ளை), மாணவ சமுதாயத்திற்குக் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த அதிபர் திரு.சண்முகராஜா (இரா.சுந்தரலிங்கம்), கல்வியியலில் உயர் திறன்களையுடைய அனுபவ முதிர்ச்சியாளர் (ஏம்.எஸ்.ஏ.எம். முகுதார்), கடமையே கண்ணான ஆசான் (இரா.சின்னத்தம்பி), இதயத்தால் வாழ்த்துகிறேன் (T.V.மாரிமுத்து), அநீதிக்கெதிராக போராடிய போராளி (க.ஆறுமுகதாஸ்), மனித நேயமுள்ள பண்பாளன் (க.ஆறுமுகதாஸ்), நட்புக்கு இனிய நண்பர் (எஸ்.இராமகிருஷ்ணன்), சிறந்த அதிபருக்கான விருதுபெற்ற மறக்கமுடியாத அதிபர் (டீ.ளு.சர்மா), சமூகப் பணியை எதிர்கொள்ளும் உத்தமர் (மனோ ஸ்ரீதரன்), The Shan Whom I Knew (A.P.Kanapathypillai), அதிபர்… ஆசானுமாகி அன்புத் தந்தையுமானவர் (ஆ.ஆ. தாஸின்), வன்னியில் நற்பணியாற்றிய சேவையாளன் (கே.வி.கே.திருலோகமூர்த்தி), கண்டிப்பும் கடமை உணர்வும் மிக்க அதிபர் (ந.தவராசா), சண்முகராசா எனும் சான்றோன் (அ.பொ.செல்லையா), A Tribute to Our Distinguished Person (P.G.Joseph), கிளிநொச்சியில் திரு. வே.சண்முகராஜா (அ.கனகரத்தினம்), அநீதியைக் கண்டு மனம் பொறுக்காதவர் (வி.சாமி), அகவை அறுபது காணும் ஆசான் வாழ்க வாழ்கவே (பா.குமாரஸ்வாமி சர்மா), அதிபர்… ஒரு நோக்கு (செல்வராணி வேதநாயகம்), கல்விப் பணியில் சிறந்த ஒரு முகாமையாளர் (கோ.பரமானந்தன்), பன்முக ஆற்றல்கள் படைத்த நல்லதோர் வழிகாட்டி (திருமதி. பவானி மகாதேவன்), இளைப்பாறும் எங்கள் செம்மலே (எம்.பி.செல்வவேல்), ஆளுமைமிக்க எம் அதிபர் (எம்.ரி.தங்கநாயகம்), மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய நெஞ்சமெல்லம் நிறைந்த அதிபர் (N.பிரகாஸ்), விடிவுக்கு வித்திட்டவர் (B.கவிதா நிரோஷினி), தெய்வீக வாழ்வுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் (வள்ளிநாயகி கணபதிப்பிள்ளை), The Ceylon Moor Ladies’ Union (Ruzaina Mahuruf, கல்விப் பணி தொடரட்டும் (த.மனோகரன்), ஓய்விலும் சேவை தொடரட்டும் (ஆர்.கணபதிப்பிள்ளை), “சண்” ஒரு அப்பழுக்கற்ற நல்லாசிரியர் (வ.திருநாவுக்கரசு), தலைசிறந்த நிர்வாகஸ்தர் (சோமசுந்தரம்), மாதா, பிதா, குருவான வழிகாட்டி (திருமதி. சோமசுந்தரம் மங்களகௌரி), இறைவன் கொடுத்த கொடை (மு.விக்னேஸ்வரி) ஆகிய மலரும் நினைவுகளின் பதிவாக இச்சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39082).
Fishin’ Frenzy All stars Slot Trial by Plan Gambling how to play the pokies 94 22% RTP 2024
Content How to play the pokies | Simple tips to Enjoy from the Fishin Frenzy. Obtaining Scatter Symbols Benefits out of Fishin’ Frenzy: The top