14937 தமிழியச் சான்றோர்.

நா.வை.குமரிவேந்தன் (இயற்பெயர்: மகேந்திரராசா). கிளிநொச்சி: குமரித் தமிழ்ப் பணிமன்றம், 84, ஜெயந்தி நகர், 1வது பதிப்பு, மார்கழி 2012. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 85, கந்தசுவாமி கோவில் வீதி). 91 பக்கம், விலை: ரூபா 170.00, அளவு: 21×14.5 சமீ. தமிழ்மொழியை காலம்காலமாக மொழிக்கலப்பிலிருந்து பாதுகாத்து எம்மிடம் இனிய மொழியாகக் கையளித்த சான்றோர்களை தமிழியச் சான்றோர்கள் என்கிறோம். இருண்மண்டிக் கிடந்த உலகை ஒளியேற்ற அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள், மொழியைப் பாதுகாக்க அவர்கள் மேற்கொண்ட பணிகள் போன்ற செயல்களை இந்நூல் பதிவுசெய்கின்றது. தேவநேயப் பாவாணர், ஞானப்பிரகாச அடிகள், சி.வை. தாமோதரம்பிள்ளை, சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர் போன்ற சான்றோர்களின் வரலாற்றை கட்டுரைகளின் வாயிலாக அறியமுடிகின்றது. இவை என்னுரை, வாழ்கவே, தமிழ்மொழி மீட்பர் மொழிஞாயிறு, நல்லூர் வண. ஞானப்பிரகாச அடிகள், பதிப்புச் செம்மல் சி.வை.தாமோதரம்பிள்ளை, சுன்னாகம் அ.குமாரசாமிப் புலவர், தனித் தமிழில் எழுத முயலுவோம், மும்மொழிக் கல்வி, தமிழின் வரிவடிவ வரலாறு ஆகிய ஒன்பது இயல்களில் வழங்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 52981).

ஏனைய பதிவுகள்

17171 பௌத்தமும் இஸ்லாமும்: சமூக நல்லிணக்கமும் மனிதநேயமும்.

அஷ் ஷெய்க் ஆஸாத் ஸிராஸ், அஷ் ஷெய்க் அஷ்கர் அரூஸ். கொழும்பு 9: ரீட் மோர் (Read more) பப்ளிக்கேஷன், 82, ஸ்ரீ வஜிரானந்த மாவத்தை,  1வது பதிப்பு, ஓகஸ்ட் 2023. (கொழும்பு: Alpha