13032 அலையும் மனமும் வதியும் புலமும்: பத்திகள்.

சந்திரவதனா செல்வகுமாரன். ஜேர்மனி: மனஓசை வெளியீடு, Manaosai Verlag, Schweickerweg  29, 74523  Schwabisch Hall, Deutschland,1வது பதிப்புஇ மே 2019. (ஜேர்மனி: Stuttgart).
112 பக்கம்இ விலை: குறிப்பிடப்படவில்லைஇ அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-3-9813002-6-0.

இவை புலம்பெயர் வாழ்வில் வாடியிருந்த பொழுதுகளையும், காலநிலை, புதிய கலாச்சாரத்தில் இணங்கிப்போதல், மொழியின் புரிதல், பண்பாட்டின் சுயதரிசனம் என்று பல்வேறு அனுபவங்களையும், அவதானிப்புகளையும், கதைகளாகச் சொல்லும் மனதின் ஓசைகளாகப் பதிந்துவிட்ட பத்தி எழுத்துக்களின் தொகுப்பு. இதில் இடம்பெற்றுள்ள 19 பத்தி எழுத்துக்களும் அந்த நாட்கள், கரண்டி, அழைப்புமணி, ஒரு சனிக்கிழமை, அவள் வருகிறாள், சில பக்கங்கள், தவிர்க்கமுடியாதவைகளாய், அக்கரைப் பச்சைகள், தீர்வுகள் கிடைக்குமா?, விவாகரத்து, பயணம், உபதேசம், சில நேரங்களில் சில சந்திப்புகள், குட்டைப் பாவாடைப் பெண், எமக்கான கதவு, பொட்டு, அவன் ஆம்பிளை நான் பொம்பிளை, ஓர் அசாதாரண நாள், வாய் இருந்தால் வங்காளம் போகலாம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன. புலோலி மேற்கு ஆத்தியடியைச் சேர்ந்த சந்திரவதனா 1986 இலிருந்து ஜேர்மனியில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகின்றார். 1975முதல் எழுதிவரும் இவர் வானொலி, பத்திரிகை, சஞ்சிகை, இணையத்தளம் என அனைத்து ஊடகங்களின் வழியாகவும் தன் இலக்கிய ஆளுமையை வெளிப்படுத்தி வருபவர். இவரது முதல் தொகுப்பான மன ஓசை முப்பது கதைகளுடன் 2007இல் வெளிவந்தது. இது இவரது இரண்டாவது தொகுப்பு.

ஏனைய பதிவுகள்

Online Slot machines Twist for real Money

Content Player’s account could have been banned just after detachment. Splendid Jackpot Harbors What exactly are progressive jackpot harbors? Enjoy Your Award! Sign up incentive

CUTIE Pie Definition & Meaning

Content The Accreditation & Mate – casino Mainstage Bingo login Sweet/Affectionate Nicknames for girls They doesn’t count if forgotten by many below ground supporters because

17464 கற்பனைச் சிறகுகள்: கட்டுரைக் கனி தரம் 4, 5.

நந்தினி ஜென்சன் றொனால்ட். தென்மராட்சி: அன்சன் கலையகம், உசன், 1வது பதிப்பு, ஆடி 2023. (தென்மராட்சி: சக்தி பதிப்பகம், மீசாலை). 36 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 450., அளவு: 24.5×18 சமீ., ISBN: