12010 – நூலகம்.

சத்தியன் தவராஜா. திருச்சிராப்பள்ளி 620017: நூலகம் பேசுகிறது, எண் 9, 16-ஆவது வீதி, குமரன் நகர், 1வது பதிப்பு, 2017. (உறையூர்: காமாட்சி அச்சகம்).

(11), 56 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ., ISBN: 978-81-932961-6-5.

சத்தியன் தவராஜா யாழ்ப்பாண மாவட்டத்தில் வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஈழநாடு பத்திரிகையில் அலுவலக நிருபராக கடமையாற்றிய பின்னர் அப்பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியவர். இதழியல் கற்கை நெறியைக் கற்று ஈழநாதம் நாளிதழின் உதவி ஆசிரியராகக் கடமையாற்றினார். 2001இல் வெளியிடப்பட்ட செய்தித்துறை ஒரு பார்வை என்ற நூலை எழுதியவர். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச சபை நூலகத்தில் பணியாற்றுகின்றார். நூலகம் பற்றிய இந்நூலில், அறிமுகம்-வரலாறு, நூலக வகைகள், நூலக தகவல் ஆதாரங்கள், நூலக சேவைகள், நூலகப் பகுப்பியல், நூலகப் பட்டியலாக்கம், நூல்கள் பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் ஆகிய ஏழு இயல்கள் அடங்கியுள்ளன.

ஏனைய பதிவுகள்