12094 – இந்து தருமம் 1992-1993: குறிஞ்சிக்குமரன் ஆலய வெள்ளிவிழா.

முருகவேள் மகாசேனன் (இதழாசிரியர்). பேராதனை: இந்து மாணவர் சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, நவம்பர் 1993. (கொழும்பு: லக்சு கிராப்பிக்ஸ்).

(6),viii, 102 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×20.5 சமீ.

இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இம்மலரின் முதலாம் பகுதி வரலாற்றுக் கட்டுரைகளைக் கொண்டதாகவும், இரண்டாம் பகுதி விழிப்புணர்வுக் கட்டுரைகளைக் கொண்டதாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. முதலாம் பகுதியில் பிரமன் வழிபாடு (பொ.பூலோகசிங்கம்), நடுகல் வழிபாடு (ந.தாரணி), மலையகத்தில் முத்துமாரியம்மன் வழிபாடு (துரை மனோகரன்), சேக்கிழார் காட்டும் பெண்ணடியார்கள் (வ.மகேஸ்வரன்), மதம் என்பது (பா.சோதிமலர்), இந்துக்களின் விரதங்கள் (வ.நந்தகுமார்), வெண்ணெய்யைக் கையிலே கொண்டு நெய்க்கு அலைகின்றோம் (நடராஜா ரவிச்சந்திரன்), குறிஞ்சிமலைக் குமரன் (க.பாலகிருஷ்ண ஐயர்), இந்து மதத்தின் சில சிறப்பான பண்புகள் (இந்திராதேவி செல்லப்பா), ஆன்ம ஈடேற்றத்தில் இந்து மதமும் ஜி.கிருஷ்ணமூர்த்தியும் (டி. வி.ரவிசங்கர்), இந்து தர்மத்தின் உட்கிடக்கையும் சிவஞானபோதத்தின் மகிமையும் (அ.சிவராசா), குறிஞ்சிவடிவேலா (வளர்மகள்) ஆகிய ஆக்கங்கள் இடம் பெற்றுள்ளன. இரண்டாம் பகுதியில் இந்துக்களின் இன்றைய சிந்தனைக்குச் சில குறிப்புகள் (கி.தில்லைநாதன்), இந்துமதம் அன்றும் இன்றும்-ஒரு வரலாற்று நோக்கு (க.அருணாசலம்), 19ஆம் நூற்றாண்டில் ஈழத்தில் தோன்றிய சைவசமய இயக்கங்கள் (இரா.வை.கனகரத்தினம்), இந்து மதத்தின் நவீனத்துவப் போக்குகள் (அம்பிகை வேல்முருகு), அந்தோ வழிபாடு கண்காட்சியானதே (மு.சுந்தரச் செல்வன்), மனமாற்றம் (சோ.சந்திரகாந்த்), வாழ்கையை வளம்படுத்தும் இந்து சமயம் -இன்றைய நிலையில் (சி.வளர்மதி), எங்கள் முதுகு (தி.பத்மநாதன்), மதங்களும் இளைய தலைமுறையினரின் ஈடுபாடும் -இன்று (பூங்குடியான்), நாமும் எமது மதமும் (து.சத்தியசீலன்), மதமாற்றம் இந்து சமயத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும் அவற்றைத் தவிர்க்கும் முறைகளும் (எஸ்.கலைச்செல்வன்), மக்களின் சமயம் (இளஞ்செல்வி கயிலாசர்), அவனருளாலே அவன்தாள் பணிவோம் (பொ.கேதாரேஸ்வரி), ஒரு வரப்பிரசாதம் (பா.நித்தியானந்தக் குருக்கள்), சமுதாயப் பணியில் இந்து மதம் (இரா.இரவிசங்கர்), குறிஞ்சிவேலனே (வி.ஞானாம்பிகை) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13701).

ஏனைய பதிவுகள்

Pop Wikipedia

Content Schauen Sie sich diese Web-Site an: Schritt: Erhalten Diese via AVG Browser bei dem Surfen diese Inspektion Popups dürfen kein Störfaktor coeur Vom acker