12689 – இசையியல் விளக்கம்: 3ம் பாகம்.

மீரா வில்லவராயர். மொரட்டுவை: மீராவில்லவராயர், 21B 2ஃ1 , 1வது பதிப்பு, 2003. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, E.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

159 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5 x 15 சமீ.

வடஇலங்கை சங்கீத சபை தரம் 5 பாடத்திட்டங்களுக்கமைவாக எழுதப்பட்டஇசை அறிமுக நூல். தரம் ஐந்து பாடத்திட்டம், கிராம, மூர்ச்சனா, ஜாதிஎன்பவற்றின் விபரம், வாதி, சம்வாதி, விவாதி அனுவாதி ஆகியவற்றின் விரிவானவிளக்கம், 22 சுருதிகள் பற்றிய முழு விபரம், இராகலட்சணம், மனோதர்மசங்கீதத்தின் பிரிவுகளும் இராகம் தானம் நிரவல் பாடும் முறைகளும், தசவிதகமகங்கள், உருப்படிகளுக்கு மதிப்பு வியாசம் எழுதுதல், இசைக்கருவிகளின்பிரிவு, நாதஸ்வரம், தவில், புல்லாங்குழல், கஞ்சிரா, தேசாதி மத்யாதி 175தாளங்கள், கானகாலம்ராகரஸங்கள் பண்வகைகள், சியாமா சாஸ்திரிகள்,முத்துஸ்வாமி தீஸிதர், கோபாலகிருஷ்ண பாரதியார், பேராசிரியர் சாம்பமூர்த்தி,விபுலானந்த அடிகள், ஸ்வாதி திருநாள்மகாராஜா, மைசூர் வாசுதேவாசாரிகள்,அருணகிரிநாதர், புத்துவாட்டி சோமு, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசக சுவாமிகள்,பல்லவியின் பிரிவுகள், ஈழத்து இசை வரலாறும் வளர்ச்சியும்,பண்ணிசை வரலாறும் வளர்ச்சியும், ஈழத்து நாட்டார் இசை வரலாறும் வளர்ச்சியும், கேள்விஞானப் பரீட்சைக்குரிய வினாக்கள், பார்த்துப் பாடலுக்கானசஞ்சாரங்கள்,மாணவருக்குரிய அறிவுறுத்தல்கள், மாதிரி வினாத்தாள்கள் ஆகிய 36 பாடங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தின் அழகியல்துறைப் பிரிவின் கர்நாடக சங்கீதத் துறைக்குச் செயற்றிட்ட அதிகாரியாக நூலாசிரியர் விளங்குகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்கநூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29677).

ஏனைய பதிவுகள்