சச்சிதானந்தம் ஸ்ரீகாந்தா. கொழும்பு 4: திருமதி பு.சச்சிதானந்தம், 10 L-Block தரைத் தளம், அரச தொடர்மாடிக் குடியிருப்பு, 1வதுபதிப்பு, ஒக்டோபர் 1977. (பருத்தித்துறை: கலாபவன அச்சகம்).
xii, 200 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 12.50, அளவு: 22 x 14.5 சமீ.
வட இலங்கை சங்கீத சபையினரின் 1975-ம் ஆண்டுப் பாடத்திட்டத்திற்கேற்ப 2ம் 3ம் 4ம் ஆண்டுப் பரீட்சைகளுக்குத் தயார் செய்யும் மாணவர்களுக்கும் க.பொ.த. சாதாரணதர , தேசிய கல்விச் சான்றிதழ் பரீட்சைகளுக்கும் கர்நாடக இசையைப் பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கும் உதவும் கைந்நூல். நூலாசிரியர் மேலைப் புலோலி சச்சிதானந்தம் ஸ்ரீகாந்தாஇ பம்பலப்பிட்டி கொழும்பு இந்தக் கல்லூரியின் கலைமன்ற இசை ஆசிரியராவார். இவர் இந்நூலை இசையின் அடிப்படை அம்சங்கள், இராகம், இராக இலட்சணங்கள் (29 இராகங்கள்), தாளம், மனோதர்ம சங்கீதம், இசைக் கருவிகள், தென்னிந்திய இசை உருப்படி வகைகளின் பிரிவுகள், வாக்கேயகாரர்கள் (இசைப் புலவர்கள்) ஆகிய எட்டு அத்தியாயங்களில் எழுதி வழங்கியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2612).