12696 – ஹிந்துஸ்தானி இசை-மேற்கத்திய இசை: ஓர் அறிமுகம்.

மீரா வில்லவராயர். மொரட்டுவை: மீரா வில்லவராயர், 21B 2/1 , 1வது பதிப்பு, 2003. (கொழும்பு 6:
வின்னர்ஸ் லிமிட்டெட், 30, நிஹால் சில்வா மாவத்தை, கிரில்லப்பனை).

vi, 72 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 14.5 சமீ.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர வகுப்பின் கர்நாடக சங்கீத பாடத்திட்டம் 1995இல் மாற்றியமைக்கப்பட்ட வேளை கர்நாடக இசையோடு மேற்கத்திய,ஹிந்துஸ்தானி இசை சம்பந்தமான ஆரம்ப அறிவையும் மாணவர் பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு சில விடயங்கள் பாடத்திட்டத்தில் புகுத்தப்பட்டன. திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தைக் கருத்திற்கொண்டு இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. ஹிந்துஸ்தானி இசையின் இராகங்கள், ஹிந்துஸ்தானி இசை உருப்படி வகைகள், ஹிந்துஸ்தானி இசைத் தாளங்கள், ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் பாவனையில் உள்ள வாத்தியக் கருவிகள், கர்நாடக ஹிந்துஸ்தானி சங்கீதங்களுக்கு இடையிலான ஒற்றுமை/வேற்றுமைகள், ஹிந்துஸ்தானி சங்கீத லிபி முறை, கர்நாடக சங்கீதத்தில் ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் செல்வாக்கு, ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் பிரபல்யம் வாய்ந்த வாக்கேயகாரர் சரித்திரம், ஐரோப்பிய சங்கீதமும் கர்நாடக சங்கீதமும்: ஓர் ஒப்புநோக்கு, ஐரோப்பிய சஙகீத லிபி முறை, ஐரோப்பிய சங்கீத வாத்தியக் கருவிகள், ஐரோப்பிய சங்கீதத்தில் பிரபல்யம் வாய்ந்த வாக்கேயகாரர் சரித்திரம், மேலைத்தேய இசையில் வழங்கும் சில பதங்களுக்குரிய விளக்கங்கள் ஆகிய அத்தியாயத் தலைப்புகளில் இப்பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24686).


மேலும் பார்க்க: 13A05.

ஏனைய பதிவுகள்