ஜே.ஈ.ஜெயசீலன். யாழ்ப்பாணம்: வளன் ஆச்சிரமம், 47, 6ம் குறுக்குத் தெரு, (102, பிரதான வீதி), 1வது பதிப்பு, ஜுலை 1997. (யாழ்ப்பாணம்: எஸ்.ஏ.அழகராஜா, அன்னை அச்சகம், குருநகர்).
vii, 219 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ.
இந்நூல், சுவாமி ஜே.ஈ.ஜெயசீலன் அவர்கள் 1988, 1995ம் ஆண்டுகளில் பல்வேறு அரங்குகளிலும் வழங்கியிருந்த ஆய்வுரைகளின் அடிப்படையில் அமைந்த விரிவான ஆய்வாகும். ஆதிகால கிறிஸ்தவத்தின் நிழல்கள், ஆயிரம் மௌன ஆண்டுகள், போர்த்துக்கேயர் காலம் (மிசனரிகள், மனந் திரும்புதல், வேதசாட்சிகள், நான்குவகைக் கிறிஸ்தவர்கள், வாளும் மனமாற்றமும், தாந்தரிகமும் மரியாளும், பண்பாட்டுமயமாக்கல், போர்த்துக்கேயர் கால வரலாற்று பின்குறிப்புகளும் ஒல்லாந்தர் கால முன்குறிப்புகளும்), ஒல்லாந்தர் காலம் ஒரு கண்ணோட்டம் (யோசவ்வாஸ் முனிவர், சாங்க்காபாங்க சுவாமிகள், வேத கலாபனையும் அறவழியும்), ஆங்கிலேயர் காலம் ஒரு பார்வை (மத சுதந்திரமும் பிரச்சினைகளும், வசந்தகாலம்), சுதந்திரகாலம் (ஆரம்பநிலை, ஆயர் எமில், மறைமாவட்ட குருக்கள், லோங்கும் எமிலும், சமகாலப் பின்னணி, அதிர்ச்சி தந்த அறிக்கை, மிசனரிகள் வெளியேற்றம், இனப்பிரச்சினை, புதிய மிசனரிகள், பண்டாரநாயக்காவின் முடிவு), சுதந்திரகாலம் 1960-1977 (யாழ். அரசியல் கலாச்சாரம், கல்வி விருத்தி பிரச்சினைகள், கிராமக்கல்வி, பாடசாலைகள் பறிபோதல், கல்வி நிர்வாகம் அரசமயம், 2ம் வத்திக்கான் சங்கம், இல்லற அப்போஸ்தலர், மறைக்கல்விப் பணி, பாதுகாவலன் மறுமலர்ச்சி, எமிலின் ஆளுமை), இயற்கை அமைதியில் இறைவனுடன், எமிலும் பிற சமய சகோதரர்களும், சைவசமயப் பெரியாருடன் தோழமை, உறவும் உபத்திரவமும், உறவில் திருப்பம், செபமாலைத்தாசர் கன்னியர், ஆகிய விரிவான தலைப்புகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 124177).