10381 வேம்பின் பயன்கள்: ஓர் அறிமுகம்.

மு.கந்தசாமி. சுன்னாகம்: யாழ்ப்பாணக் கல்லூரி விவசாய நிறுவனம், மருதனாமடம், 1வது பதிப்பு, பெப்ரவரி 1995. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

(2), 72 பக்கம், விலை: ரூபா 35., அளவு: 21×14 சமீ.

வேம்பின் பயன்-ஒரு கண்ணோட்டம், வேம்பின் தாவரவியற் பண்புகள், வேம்பிலிருந்து இரசாயனப் பொருட்கள், சூழல் பாதுகாப்பில் வேம்பின் பயன், கைத்தொழில்துறையில் வேம்பின் பயன், மனித உணவில் வேம்பின் பயன், கால்நடை உணவில் வேம்பின் பயன், பயிர் உணவில் வேம்பின் பயன், மருத்துவத்துறையில் வேம்பின் பயன், பயிர்ப் பாதுகாப்பில் வேம்பின் பயன், வேப்பமரச் செய்கை, வேம்பு அபிவிருத்தி ஆகிய 12 அத்தியாயங்களில் இந்நூல் வேப்பமரத்தின் விரிவான பயன்பாடு பற்றி விளக்குகின்றது. நூலாசிரியர் யாழ்ப்பாணக் கல்லூரி விவசாய நிறுவனத்தின் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 116336).     

ஏனைய பதிவுகள்

15160 சீடோவைப் புரிந்துகொள்ளல்.

ரமணி ஜயசுந்தர (சிங்கள மூலம்), சோ.பத்மநாதன் (தமிழாக்கம்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2003. (ஹோமாகம: கருணாரத்ன அன்ட் சன்ஸ், 67, ருனுயு கைத்தொழில்