நந்தா (இயற்பெயர்: துரைராசா நந்தீஸ்வரி). வவுனியா: கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக் கலையகம்).
xiii, 76 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 17.5×12 சமீ.
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 24ஆவது வெளியீடு. நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் கலைப்பட்டதாரியான நந்தாவின் முதலாவது புதுக்கவிதைத் தொகுதி இது. சமூக வாழ்வியல் கோலங்களைத் தாங்கிவரும் இக்கவிதைகளின் உரிமையாளரான நந்தா, மாருதம் சஞ்சிகையின் உதவி ஆசிரியையாகவும் பணியாற்றுகின்றார்.